இந்தியாவில் ஐபோன் எஸ்இ மாடல் அதிரடி விலை குறைப்பு..!

இந்தியாவில் ஐபோன் எஸ்இ மாடல் அதிரடி விலை குறைப்பு..!

இந்தியாவில் ஐபோன் எஸ்இ மாடல் அதிரடி விலை குறைப்பு..!
Published on

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ இந்தியாவில் விலை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் இந்திய இணையதளத்தில் ஐபோன் எஸ்இ 16 ஜிபி மாடல் ரூ.39,000 மற்றும் 64 ஜிபி மாடல் ரூ.44,000 என்ற விலையிலும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஆப்பிள் அதிகாரப்பூர்வ விற்பனையாளர்கள் எஸ்இ 16 ஜிபி மாடலினை ரூ.19,999 என்ற விலையில் விற்பனை செய்து வருகின்றனர். இதே போல் 64 ஜிபி மாடல் ரூ.25,999 என்ற விலைக்கு விற்பனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. விலை குறைப்பு மட்டுமின்றி, இந்த இரு மாடல்களுக்கும் ரூ. 5,000 கேஷ்பேக் மற்றும் குறிப்பிட்ட கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் பயன்படுத்தி வாங்கும் போது சிறப்பு தள்ளுபடிகளும் வழங்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த கேஷ்பேக் மற்றும் சிறப்பு தள்ளுபடி சலுகைகள் மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐபோன் எஸ்இ மாடல் 4.0 இன்ச் திரை, ஆப்பிள் ஏ9 பிராசஸர் உடன் ஐஓஎஸ் 10 இயங்குதளத்தில் இயங்கும். கைரேகை ஸ்கேனர் மற்றும் 12 எம்பி பின்புற கேமரா மற்றும் 1.2 எம்பி முன்புற கேமரா போன்ற சிறப்பம்சங்களையும் பெற்றுள்ளது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com