இந்தியாவில் அறிமுகமானது நோக்கியா C30 ஸ்மார்ட்போன்! ஜியோ பயனர்களுக்கு சிறப்பு சலுகை!

இந்தியாவில் அறிமுகமானது நோக்கியா C30 ஸ்மார்ட்போன்! ஜியோ பயனர்களுக்கு சிறப்பு சலுகை!
இந்தியாவில் அறிமுகமானது நோக்கியா C30 ஸ்மார்ட்போன்! ஜியோ பயனர்களுக்கு சிறப்பு சலுகை!

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகி உள்ளது நோக்கியா C30 ஸ்மார்ட்போன். இந்த போனுக்கு பிரத்யேக சலுகையையும் அறிவித்துள்ளது ஜியோ. கடந்த ஜூலை மாதம் சர்வதேச சந்தையில் இந்த போன் அறிமுகமாகி இருந்தது. பட்ஜெட் போன்கள் பட்டியலில் இந்த போன் இடம் பிடித்துள்ளது. 

சிறப்பம்சங்கள்?

ஆண்ட்ராய்ட் 11 கோ எடிஷன் இயங்குதளம், 6.82 இன்ச் HD டிஸ்பிளே, 6000 mAh பேட்டரி, 10W வொயர்ட் சார்ஜிங் சப்போர்ட். வாட்டர் நாட்ச் டிஸ்பிளே, ரியர் சைடில் டியூயல் கேமரா, அதில் 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா. பின்பக்கத்தில் ஃபிங்கர்பிரிண்ட் ரீடர், 4ஜி சப்போர்ட், மைக்ரோ USB, 3ஜிபி ரேம் + 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் என இரண்டு வேரியண்டுகளில் இந்த போன் கிடைக்கிறது. பச்சை மற்றும் வெள்ளை என இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது இந்த போன். ஆன்லைன் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் இந்த போன் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விலை என்ன?

3ஜிபி ரேம் கொண்ட போனின் விலை 10,999 ரூபாய்க்கும், 4ஜிபி ரேம் கொண்ட போனின் விலை 11,999 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இந்த போனுக்கு பிரத்யேக சலுகையும் அறிவித்துள்ளது ஜியோ. அதன்படி ஜியோ பயனர்களுக்கு இந்த போனின் விலையில் 10 சதவிகிதம் அல்லது அதிகபட்சம் 1000 ரூபாய் வரை சலுகை கிடைக்கிறது. அதனை பெற ஜியோ பயனர்கள் ‘மை ஜியோ’ அப்ளிகேஷனின் பதிவு செய்ய வேண்டியுள்ளது.  

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com