\
நோக்கிய 8 மாடலில் ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட்

நோக்கிய 8 மாடலில் ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட்

நோக்கிய 8 மாடலில் ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட்
Published on

நோக்கியா 8 மாடல் செல்போன்களில் ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.

எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 8 மாடலில், ஆண்ட்ராய்டு ஓரியோ பீட்டா ஒரு மாதத்திற்கு முன் வெளியானது. இந்நிலையில் நோக்கியா 8 மாடலுக்கான ஆண்ட்ராய்டு ஓரியோ அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. இதனை எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஜூஹா சர்விகாஸ் ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். இதன் மேம்பாட்டு மெமரி அளவு 1518.1 எம்பி ஆக உள்ளது.

இந்த அப்டேட் உடன், நவம்பர் மாதத்திற்கான ஆண்ட்ராய்டு பாதுகாப்பு மேம்பாடும் நோக்கியா 8 மாடலில் வழங்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நோக்கியா 2, நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 போன்ற மாடல் ஃபோன்களுக்கும் விரைவில் ஆண்ட்ராய் ஓரியோ அப்டேட் வழங்கப்படவுள்ளது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com