\
ஆகஸ்டில் வெளிவருகிறது நோக்கியா 8

ஆகஸ்டில் வெளிவருகிறது நோக்கியா 8

ஆகஸ்டில் வெளிவருகிறது நோக்கியா 8
Published on

எம்.எம்.டி.குளோபல் நிறுவனம் நோக்கியா 8 ஸ்மார்ட்ஃபோனை வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் அடுத்த செட் நோக்கியா ஸ்மார்ட்போன்களை வெளியிட தயாராகிவிட்டதாகவும், விரைவில் நோக்கியா 8 ஸ்மார்ட்ஃபோன் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி லண்டனில் நடைபெறும் நிகழ்ச்சியில் நோக்கியா 8 போன் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நோக்கியா 8 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்.....

ஆண்டிராய்டு 7.1 நௌகட்
5.7 இன்ச் ஸ்போர்ட் குவாட் எச்டி டிஸ்ப்ளே
ஸ்னாப்டிராகான் 835
64 ஜிபி ஸ்டோரேஜ்
6ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம்
13 மெகாபிக்சல் ரியர் கேமரா
13 மெகாபிக்சல் முன்பக்க கேமரா

ஸ்மார்ட்ஃபோன் புளு, சில்வர், காப்பர் கோல்டு உள்ளிட்ட நிறங்களில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.43,400 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com