பட்ஜெட் விலையில் நோக்கியா ஸ்மாட்போன்கள்!

பட்ஜெட் விலையில் நோக்கியா ஸ்மாட்போன்கள்!

பட்ஜெட் விலையில் நோக்கியா ஸ்மாட்போன்கள்!
Published on


நோக்கியாவின் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில், ஜுன் 13 முதல் விற்பனைக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

கடந்த மாதம் நோக்கியா 3310 விற்பனைக்கு வந்தது. இந்நிலையில், எச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 3, 5, மற்றும் 6 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் ஜூன் 13-ம்தேதி முதல் விற்பனைக்கு வரும் என்றும், இதற்கான அறிமுக விழா புதுடெல்லியில் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நோக்கியா 3, நோக்கிய 5, நோக்கியா 6 ஆகிய 3 வகையில் வெளியிடப்படும் இந்த ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள்: 

நோக்கியா 6-ல், 5.5 இன்ச் ஹெச்.டி.ஸ்கிரீன், 2.5.டி டிசைன் மற்றும் கொரில்லா கிளாஸ் புரொடக்ஷன், கைரேகை சென்சார், ஸ்னாப்டிராகன் 430 SoC, 3GB Ram, 32GB இன்டர்நெல் ஸ்டோரேஜ், 3000mAh பேட்டரி, 16 மெகாபிக்சல் ரியர் சென்சார், 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. 

நோக்கியா 5-ல், 5.2இன்ச் ஹெச்டி, 13 மெகாபிக்சல், 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா, மைக்ரோ யுஎஸ்பி 2.0, ஸ்னாப்டிராகன் 430 SoC, 2GB Ram, 3000mAh பேட்டரி திறன், கைரேகை சென்சார், 16 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ் உள்ளிட்டவைகள் உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com