\
ஜூம்(ZOOM) வீடியோ ஆப்க்கு தடையா?: மத்திய அரசு விளக்கம்

ஜூம்(ZOOM) வீடியோ ஆப்க்கு தடையா?: மத்திய அரசு விளக்கம்

ஜூம்(ZOOM) வீடியோ ஆப்க்கு தடையா?: மத்திய அரசு விளக்கம்
Published on

பாதுகாப்பு காரணங்களுக்காக ஜூம் ஆப் தடை செய்யப்படுமா என்ற கேள்விக்கு, ஜூம் செயலியை தடைசெய்யும் எந்த திட்டமும் இல்லை என்று மக்களவையில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் ஆந்திர எம்.பி கனுமுரு ரகுராமராஜூ எழுப்பியிருந்த  கேள்வியில் “ தீவிரமான பாதுகாப்பு காரணங்களுக்காக, அரசுக்கு ஜூம் செயலியை தடைசெய்யும் திட்டம் உள்ளதா”என்று கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய தகவல்தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே “ ஜூம்செயலியை தடை செய்வதற்கான எந்த திட்டமும் அரசிடம் இல்லை. ஜூம் உள்ளிட்ட ஆன்லைன் வீடியோ கான்பரன்சிங் செயலிகளை பாதுகாப்பாக எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com