NGC 3640
NGC 3640நாசா

சிறிய விண்மீன் திரள்களை உள்ளிழுத்து NGC 3640 விண்மீன் பெரியதாக வளர்கிறது - ஆய்வாளர்கள் கருத்து

ஐரோப்பிய தெற்கு ஆய்வகத்தின் மிகப் பெரிய தொலைநோக்கி (VLT) இன் சமீபத்திய படங்கள் NGC 3640 அதன் அடுத்த இலக்கான சிறிய விண்மீன் NGC 3641 ஐ நெருங்கக்கூடும் என்று கூறுகின்றன.
Published on

கடலில் உள்ள சில மீன்கள் சிறிய மீன்களை உட்கொண்டு வளர்ந்து வருவதைப்போன்று விண்வெளியில் NGC 3640 என்ற நட்சத்திரம் தனக்கு அருகில் இருக்கும் சிறிய விண்மீன் திரள்களை உறிஞ்சி வளர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

விண்வெளியில் ஆய்வாளர்களையே பிரமிக்கவைக்கும் சில அசாதாரண நிகழ்வுகள் நடந்துக்கொண்டு இருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்து வரும் அதே வேளையில்,

பூமியிலிருந்து தோராயமாக 88 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள NGC 3640, என்ற நீள்வட்ட விண்மீன் முந்தைய காலத்தில் சிறிய விண்மீன் திரள்களை உறிஞ்சியதற்கான அறிகுறிகளைக் காட்டுகிறது என்பதை வானியலாளர்கள் கவனித்துள்ளனர்.

ஐரோப்பிய தெற்கு ஆய்வகத்தின் மிகப் பெரிய தொலைநோக்கி (VLT) இன் சமீபத்திய படங்கள் NGC 3640 அதன் அடுத்த இலக்கான சிறிய விண்மீன் NGC 3641 ஐ நெருங்கக்கூடும் என்று கூறுகின்றன. இப்படி NGC 3641 விண்மீன்களை தன்னுடன் இணைத்துக்கொண்டால், ஏற்கனவே ஓவல் அல்லது முட்டை வடிவத்தில் இருக்கும் NGC 3640 விண்மீனானது தனது உருவத்தை மாற்றிக்கொள்ளக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

NGC 3640 போன்ற விண்மீன் திரள்கள் பெரும்பாலும் அவற்றின் சுற்றுப்புறங்களிலிருந்து வாயு மற்றும் நட்சத்திரங்களைச் சேர்ப்பதன் மூலமோ அல்லது சிறிய விண்மீன் திரள்களுடன் இணைப்பதன் மூலமோ வளருவதுடன் புதிய நட்சத்திர உருவாக்கத்தைத் தூண்டுவதற்கு காரணமாக அமையும். ஆய்வாளர்களின் இத்தகைய விண்மீன் திரள்களின் ஆய்வு, விண்மீன் பரிணாமத்தை இயக்கும் செயல்முறைகள் மற்றும் பிரபஞ்சத்தின் மாறும் தன்மை பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com