தெரியாத போன் அழைப்புகளை தடுக்க புதிய வழி! WhatsApp கொண்டுவந்துள்ள ‘சைலன்ஸ்’ ஆப்சன்!

ஸ்கேம் அழைப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை தானாகவே சைலண்ட்டில் போட பயனர்களை அனுமதிக்கிறது வாட்ஸ்அப்.
WhatsApp New Update
WhatsApp New UpdateTwitter

இந்தியாவில் மோசடி அழைப்புகள் அதிகரித்து வரும் நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு அம்சத்தை இறுதியாக வாட்ஸ்அப் கொண்டுவந்துள்ளது. இதுகுறித்து மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், ‘வாட்ஸ்அப் பயனர்கள் இப்போது செட்டிங்ஸில் "Silence Unknown Callers" அம்சத்தை பயன்படுத்துவதன் மூலம் அறியப்படாத அழைப்புகள் அல்லது ஸ்பேம் அழைப்புகளை புறக்கணிக்க முடியும்’ என்று அறிவித்தார்.

WhatsApp
WhatsAppANI

அதிகாரப்பூர்வ தள பதிவில், தெரியாத அழைப்புகளால் ஏற்படும் சிக்கலை தவிர்ப்பதற்காகவும், பாதுகாப்பிற்காகவும் பயனர்களுக்கு இந்த புதிய "Silence Unknown Callers" அம்சம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை WhatsApp கூறியுள்ளது. மேலும் இந்த அம்சமானது ஸ்பேம், ஸ்கேம்கள் மற்றும் தெரியாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகளை பிளாட்ஃபார்மில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பிற்காக தானாகவே திரையிடும் என்றும் கூறியுள்ளது. அதுமட்டுமல்லாமல் பாதுகாப்பு அம்சத்தை அதிகரிக்கும் வகையில் “பிரைவேசி செக்அப்” என்ற புதிய அப்டேட்டையும் வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.

தெரியாத நம்பரிலிருந்து வரும் அழைப்புகளை எப்படி சைலன்ஸில் போடுவது?

ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் இந்த அம்சத்தை மிகவும் எளிதான ஒன்றாகவே அப்டேட் செய்துள்ளது வாட்ஸ்அப்.

WhatsApp New Update
WhatsApp New UpdateTwitter

*வாட்ஸ்அப் செட்டிங்ஸில் சென்று பிரைவேசி ஆப்சனிற்கு செல்லவேண்டும்.

* பிரைவேசியில் “Calls” டேப்பிற்கு செல்லவேண்டும்.

* கால்ஸ் பிரிவில் “தெரியாத அழைப்பாளர்களை அமைதிப்படுத்து / Silence unknown callers” விருப்பத்தை மாற்றி வைக்க வேண்டும்.

‘பிரைவேசி செக்அப்’ அம்சத்தில் என்னென்ன வசதிகள்?

தெரியாத அழைப்பாளர்களை சைலன்ஸ் செய்யும் அம்சத்தை தொடர்ந்து, பயனர்களின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் “பிரைவேசி” ஆப்சனில் பலபுதிய அப்டேட்களை வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி,

Chat Lock: இந்த அம்சம் பயனர்கள் முக்கியமான சாட்களுக்கு செல்ல கடவுச்சொல்லை அமைப்பதன் மூலம் பாதுகாக்க அனுமதிக்கிறது.

Disappearing Messages: ‘மறைந்து போகும் செய்திகள்’ அம்சத்துடன், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு செய்திகள் தானாகவே மறைந்துவிடும். முன்னர் சில குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது விருப்பப்பட்ட நேரத்திற்கு தகுந்தாற்போல் அமைத்துக்கொள்ளவும் வழிவகை செய்கிறது.

Screenshot Blocking for View Once: இந்த அம்சமானது பெறுநர்கள் மீடியா உள்ளடக்கத்தை ஒரு முறை மட்டுமே பார்க்க அனுமதிக்கும். மேலும் View Once அம்சத்தைப் பயன்படுத்தும் போது, ​​ஸ்கிரீன்ஷாட்கள் எடுக்கப்படுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை WhatsApp செயல்படுத்தியுள்ளது.

Online Presence Privacy: பயனர்கள் தாங்கள் ஆன்லைனில் இருப்பதை மற்றவர்களுக்கு தெரியும்படி வைத்திருப்பதை கட்டுப்படுத்தவும், தனிப்பயனாக்கவும் அனுமதிக்கிறது. மேலும் அவர்களின் தனியுரிமையின் மீது கூடுதல் கட்டுப்பாட்டையும் வழங்குகிறது.

இந்த அம்சங்களை வழங்குவதன் மூலம், பயனர்களுக்கு மேம்பட்ட தனியுரிமை மற்றும் பாதுகாப்பான செய்தி அனுபவத்தை வழங்குவதை WhatsApp நோக்கமாகக் கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com