விமான மோதலை தடுக்க குறைந்த விலையில் வருகிறது புது செயலி..!

விமான மோதலை தடுக்க குறைந்த விலையில் வருகிறது புது செயலி..!
விமான மோதலை தடுக்க குறைந்த விலையில் வருகிறது புது செயலி..!

ஆளில்லா விமானங்கள், மற்ற விமானங்களுடன் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்வதை தடுக்க புது செயலி ஒன்று விரைவில் அறிமுகமாக உள்ளது.

ஆளில்லா தானியங்கி விமானங்களும், வழக்கமாக வானில் இயக்கப்படும் மற்ற விமானங்களும் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளும் அபாயம் இருப்பதாக நீண்ட காலமாகவே நிபுணர்கள் அச்சம் தெரிவித்து வருகிறார்கள். குறைந்த விலையில் கிடைக்கும் ஆளில்லா விமானங்களின் வர்த்தகப் பயன்பாடு அதிகரித்திருப்பதும் இந்த அச்சத்துக்கு முக்கியக்‌ காரணமாக கூறப்படுகிறது.

இந்த அச்சத்துக்கு முடிவுகட்டும் விதமான தொழில்நுட்பம் ஒன்று அறிமுகமாக இருக்கிறது. சென்ஸ்ஃப்ளே (SenseFly) என்ற நிறுவனத்தின் சார்பில் இதற்கான செயலி வடிவமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 200 முதல் 400 அடி உயரத்தில் பறக்கும் ஆளில்லா விமானங்களை, பெரிய விமானங்களின் விமானிகள் உடனடியாகப் பார்க்கும் வகையில் இந்தச் செயலி வடிவமைக்கப்பட இருக்கிறது.

மிகக் குறைந்தவிலையில் கிடைக்கும் செயலி மூலம், ஆளில்லா விமானங்கள் மோதுவதைத் தவிர்க்க முடியும் என சென்ஸ்ஃப்ளே நிறுவனம் கூறுகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com