netflix
netflixweb

நெட்பிளிக்ஸுக்கு இந்தியா மூலம் அதிக வருவாய்.. 4 ஆண்டில் ரூ.17,000 கோடி பலன்!

நெட்பிளிக்ஸுக்கு இந்தியா மூலம் அதிக வருவாய் கிடைத்திருப்பதாகவும், 2021-24 வரையில் ரூ.17 ஆயிரம் கோடி பொருளாதார பலன் கிடைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

இந்தியாவில் மேற்கொண்ட முதலீட்டால் நெட்பிளிக்ஸுக்கு, 2021 முதல் 2024 வரையில் 17 ஆயிரம் கோடி பொருளாதார பலன் கிடைத்து இருப்பதாக அந்நிறுவனத்தின் இணை சிஇஓ டெட் சாரண்டோஸ் தெரிவித்துள்ளார்.

4 ஆண்டில் 17 ஆயிரம் கோடி பலன்!

கொரோனாவுக்குப் பிறகு இந்தியாவில் அதிகமாக முதலீடு செய்ததகாவும், அதன் பலனை பார்க்க முடிவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்திய சினிமா மற்றும் தொடர்கள் சர்வதேச அளவில் கவனம் பெறுவதாகவும், ஆங்கிலம் அல்லாத நெட்பிளிக்ஸின் டாப் 10 தலைப்புகளில் இந்தியா தலைப்புகள் 15 சதவீதம் பங்கு வகிப்பதாக தெரிவித்தார்.

நெட்பிளிக்ஸ்  தயாரிப்புகளால் இந்தியாவில் 20,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. இந்தியாவில் சினிமா கலாசாரம் சிறப்பாக இருக்கிறது. மக்கள் படங்களை ஆர்வமுடன் பார்த்து அதைப் பற்றி பேசுகிறார்கள். அதுதான் தன்னை மிகவும் கவர்வதாக அவர் டெட் சாரண்டோஸ் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com