இன்றும் நாளையும் ஃப்ரீ... ஃப்ரீ... - நெட்ஃப்ளிக்ஸ் தந்த அதிரடி ஆஃபர்!

இன்றும் நாளையும் ஃப்ரீ... ஃப்ரீ... - நெட்ஃப்ளிக்ஸ் தந்த அதிரடி ஆஃபர்!

இன்றும் நாளையும் ஃப்ரீ... ஃப்ரீ... - நெட்ஃப்ளிக்ஸ் தந்த அதிரடி ஆஃபர்!
Published on

இந்தியாவில் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளமானது, இரண்டு நாட்களுக்கு இலவச சேவையை வழங்குவதாக அறிவித்தது. அதன்படி இன்றும் நாளையும் இலவச சேவையை வழங்குகிறது.

கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டன. மக்களும் வீட்டில் முடங்கி இருந்ததால், அவர்களின் பெரும்பான்மையான நேரத்தை ஓடிடி தளங்கள் ஆக்கிரமித்தன. ஓடிடி தளங்களுக்கு மக்கள் கொடுத்த ஆதரவு, இயக்குநர்களையும், முன்னணி நட்சத்திரங்களையும் ஓடிடி தளத்தின் மீது கவனம் செலுத்த வைத்தது. இதனிடையே சூர்யா நடிப்பில் சுதாகொங்கரா இயக்கத்தில் உருவான சூரரைப்போற்று படம் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்றது.

இதனால் தற்போது முன்னணி நட்சத்திரங்கள் பலரும் ஓடிடி தளத்திற்காக பணியாற்றுதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் பிரபல ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் இந்தியாவில் இரண்டு நாட்களுக்கு இலவச சேவையை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்தச் சேவை இன்று (டிசம்பர் 5) தொடங்கி நாளை (டிசம்பர் 6) முடிவடைகிறது. இந்திய மக்களிடையே தங்களின் ஓடிடி தளத்தை கொண்டுசேர்க்கும் விதமாக இந்த அதிரடி அறிவிப்பை நெட்ஃபிளிக்ஸ் அறிவித்துள்ளது.

இந்தச் சேவையை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால், https://www.netflix.com/in/StreamFest  என்ற தளத்திற்குச் சென்று உங்களுக்கான ப்ரொபைலை அந்த தளத்தில் உருவாக்கி பயன்படுத்திக்கொள்ளலாம். 

இதன் மூலம் நெட்ப்ளிக்ஸில் இடம்பெற்றுள்ள திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், டாக்குமென்ரீஸ் உள்ளிட்டவற்றை இலவசமாக நீங்கள் கண்டுகளிக்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com