சுய கட்டுப்பாட்டுக்குள் வரும் OTT: நெட்ஃபிளிக்ஸ், அமேசான் உட்பட பல தளங்கள் கையெழுத்து

சுய கட்டுப்பாட்டுக்குள் வரும் OTT: நெட்ஃபிளிக்ஸ், அமேசான் உட்பட பல தளங்கள் கையெழுத்து
சுய கட்டுப்பாட்டுக்குள் வரும் OTT: நெட்ஃபிளிக்ஸ், அமேசான் உட்பட பல தளங்கள் கையெழுத்து
Published on

இந்தியாவில் இயங்கிவரும் 15க்கும் மேற்பட்ட வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்கள், இணைய மற்றும் மொபைல் அசோஷியேஷன் ஆஃப் இந்தியாவின்(IAMAI) கீழ் சுய கட்டுப்பாட்டுக் குறியீட்டில் கையெழுத்திட்டுள்ளன.

தணிக்கை அல்லது தலையீடு, சுய-கட்டுப்பாட்டுக்கான அரசாங்கத்தின் அழைப்புக்கு பதிலளிக்கும் வகையில், OTT (over-the-top) சேவைகளை வகைப்படுத்த, பொருத்தமான உள்ளடக்க விளக்கம் மற்றும் அணுகல் கட்டுப்பாடு ஆகியவற்றிற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்கியுள்ளன. இதில் மிக முக்கியமாக, நுகர்வோர் புகார் துறை அல்லது ஆலோசனைக் குழு மூலம் குறை தீர்க்கும் வழிமுறைகள் இருக்கும் என்று குறியீடு கூறுகிறது. இதில் பாலின சமத்துவம், குழந்தை உரிமைகள் போன்ற துறைகளில் நிபுணத்துவம் பெற்ற நபர்களும் தனிப்பட்ட உறுப்பினர்களாக செயல்பட முடியும்.

ஆரம்பத்தில், அமைக்கப்பட்ட குழு தலைமை தாங்குவதை பல OTT ஆபரேட்டர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் தற்போது ஆலோசனைக் குழுவை தலைமை தாங்கியவர்களை மாற்றியமைத்துள்ளனர்.

தற்போது இந்தியாவில் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார், ALT பாலாஜி, ZEE5, அர்ரே, டிஸ்கவரி +, ஈரோஸ் நௌ, பிளிக்ஸ்ட்ரீ, ஹாய்சோய், ஹங்காமா, எம்எக்ஸ் பிளேயர், ஷெமரூ, வூட் மற்றும் ஜியோ சினிமா ஆகியவை இதில் கையெழுத்திட்டுள்ளன.

இந்த குறியீடு, வெள்ளிக்கிழமை மாலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அடுத்த 60 நாட்களில் செயல்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இது சிறந்த கதைகளை எடுத்துக்கூறுவதற்கும், பயனர் பிரச்னைகள் மற்றும் கலாசாரத்தை உணர்ந்துகொள்வதற்கும் சமநிலையை உருவாக்கும் ஒரு யோசனை என்று IAMAI-இன் டிஜிட்டல் என்டர்டெய்ன்மென்ட் கமிட்டியின் தலைவர் தருன் கட்டியெல் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு இதேபோன்ற குறியீடு ஒன்று உருவாக்கப்பட்டிருந்தாலும், இந்த ஆண்டு இந்த கட்டமைப்பில் அதிகமான கையொப்பங்கள் வந்துள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

இதில் வயது வரம்பு கட்டமைப்பின்கீழ், எல்லா வயதினருக்கும் பொருத்தமான க்யூரேட்டெட் மதிப்பீடுகளை உருவாக்கியுள்ளன. இதன்படி, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளையும் பார்க்க அனுமதிக்கலாம். வன்முறை, பாலியல் சம்பந்தப்பட்ட, தவறான வார்த்தைகள் மற்றும் எந்தவிதமான அச்சுறுத்தல் போன்றவை வெளிப்படையாக தடைசெய்யப் பட்டுள்ளன. பார்வையாளர்கள் பார்ப்பதற்கு முன்பு தங்களிக்கு என்ன தேவை என்பதை தெரிந்துகொண்டு தேர்ந்தெடுத்துப் பார்க்கலாம்.

இந்தக் குறியீட்டில் கையெழுத்திட்டவர்கள் இதிலுள்ள கன்டென்டுக்களில் பிரச்னை வராமல் இருக்க, PIN அல்லது கடவுச்சொல் போன்ற அணுகல் கட்டுப்பாட்டுக்கான தொடர்புடைய தொழில்நுட்பங்கள் மற்றும் நடவடிக்கைகளை நிறுவலாம். அதேபோல் ஒவ்வொரு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமும் நுகர்வோர் குறியீட்டை மீறுவதாக புகார் செய்யவிரும்பினால் அரசாங்க அமைப்புகள்மூலம் அணுகலாம்.

ஒவ்வொரு பரிந்துரை மற்றும் ஆலோசனை குழுவில் தனிநபர் ஒருவரும் இடம்பெற்றிருக்கவேண்டும். இவர்கள் எந்தவகையிலும் ஆதாயத்திற்காக ஈடுபடக்கூடாது. அதேபோல் ஓடிடி தளங்கள் நுகர்வோர் புகார் ரசீதை 48 மணிநேரத்திற்குள் கொடுக்கவேண்டும். புகார் வந்த 15 நாட்களுக்குள் பயனர்களுக்கு சரியான முறையில் பதிலளிக்கவேண்டும் அல்லது பதிலளிப்பதற்கான காலக்கெடுவை அவர்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும். இந்த குழுவை அணுகுவதற்கான தொடர்பு விவரங்கள் வெப்ட்சைட்டில் அல்லது செயலியில் கிடைக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com