\
இமயமலையிலும் இலவச வைஃபை

இமயமலையிலும் இலவச வைஃபை

இமயமலையிலும் இலவச வைஃபை
Published on

சுற்றுலாப் பயணிகள் வருகையை அதிகரிக்கும் நோக்கில் இமயமலையில் இலவச வைஃபை வசதியை கொண்டு வர நேபாள அரசு திட்டமிட்டுள்ளது.

மலையேற்ற வீரர்கள் எவரெஸ்ட் உள்ளிட்ட இமயமலையில் சிகரங்களில் ஏறுவதற்காகக் கூடும் பேஸ் கேம்ப் பகுதியில் இலவச வைஃபை வசதியை ஏற்படுத்த இருப்பதாக நேபாள அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கடல்மட்டத்தில் இருந்து 5,360 மீ (17,600 அடி) உயரத்தில் உள்ள லுக்லா-எவரெஸ்ட் பேஸ் கேம்ப் மற்றும் அண்ணபூர்னா பேஸ் கேம்ப் ஆகிய இடங்களில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்பட இருப்பதாக நேபாள தொலைத் தொடர்புத் துறைத் தலைவர் திகம்பர் ஜா தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இமயமலை பேஸ்கேம்ப்களில் இலவச வைஃபை சேவை ஏற்படுத்தப்பட்டால், அதுதான் உலகின் உயரமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இலவச வைஃபை வசதியாக அமையும்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com