இந்தியக் கடற்படையின் முதல் முறையாக நடத்திய, கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணையின் சோதனை வெற்றியடைந்தது.
கல்வாரி நீர்மூழ்கி கப்பலில் இருந்து இந்த ஏவுகணை சோதனையை இந்திய கடற்படை செய்தது. அரபிக்கடலில் நடத்தப்பட்ட இந்த சோதனையின்போது ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை தாக்கி வெற்றிகரமாக அழித்தது.
இதன் பின்னர், எதிரி நாட்டுக்கப்பல்களை தாக்கி அழிக்கும் இந்த ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிகழ்வு இந்திய கப்பற்படையின் ஒரு மைல் கல் எனவும் அவர்கள் பெருமிதமடைந்தனர்.
இந்த வெற்றிகரமாக சோதனைக்கு பிறகு பாதுகாப்புத்துறை விஞ்ஞானிகளை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.
இந்திய கடற்படைக்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் ஸ்கார்ப்பின்(Scorpene) ரகத்தைச் சேர்ந்த 6 நீர்மூழ்கி கப்பல்கள் மும்பையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த ரகத்தை சேர்ந்த கல்வாரி நீர்மூழ்கி கப்பலில் இருந்து நேற்று ஏவுகணை சோதனை நடத்தப்பட்டு வெற்றியடைந்ததை தொடர்ந்து, மற்ற கப்பல்களிலும் கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணை வசதி ஏற்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.