செவ்வாயில் பனி மலைகள்: நாசா தகவல்

செவ்வாயில் பனி மலைகள்: நாசா தகவல்

செவ்வாயில் பனி மலைகள்: நாசா தகவல்
Published on

செவ்வாய் கிரகத்தில் பனி படர்ந்த குன்றுகள் இருப்பதை செவ்வாய் கிரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தின் மூலம் நாசா உறுதி செய்துள்ளது.

செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வரும் நாசாவின் மார்ஸ் ரெகனைசன்ஸ் ஆர்பிட்டர் (Mars Reconnaissance Orbiter) பிடித்துள்ள புகைப்படத்தில் பனிக் குன்றுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த புகைப்படம் உயர் ரெசொல்யூஷன் கொண்ட இமேஜிங் அறிவியல் பரிசோதனை திறன் கொண்ட கேமரா (High Resolution Imaging Science Experiment - HiRISE ) மூலம் மே மாதம் 21 ஆம் தேதி எடுக்கப்பட்டது. இந்த புகைப்படத்தின் மூலம் செவ்வாய் கிரகத்தில் பனி மலைகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

செவ்வாயில் காணப்படும் பனி மலைகள், பூமியில் உள்ள பனி மலைகள் போல அல்லாமல், பனி மற்றும் கார்பன் டை ஆக்சைடு கலந்து உலர்ந்த பனிப் போல் காட்சியளிப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com