நாசா அனுப்பிய விண்கலத்தில் சிக்கல்;திட்டமிட்டபடி பூமிக்கு திரும்பமுடியாத நிலையில் சுனிதா வில்லியம்ஸ்

விண்வெளி வீரர் புட்ச் வில்மோர், வீராங்கணை சுனிதாவில்லியம்ஸ் இருவரும் அமெரிக்காவின் விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் ஸ்டார்லைனர் வடிவமைத்த விண்கலத்தில், கடந்த 5 ஆம் தேதி விண்வெளி பயணத்தைத் தொடங்கினர்.
சுனிதா வில்லியம்ஸ்
சுனிதா வில்லியம்ஸ்புதிய தலைமுறை

அறிவியல் உலகில் அசுரப் பாய்ச்சல் காட்டி வரும் மனித இனம், சிறிது தடுமாற்றத்தையும் சந்தித்து வருகிறது... இந்த தடுமாற்றத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் உள்பட 2 பேரின் நிலை குறித்த கேள்வியும் அச்சமும் எழுந்துள்ளது...

விண்வெளி... எண்ணற்ற அதிசயங்களைக் கொண்டுள்ள வான்வெளி... ஒவ்வொரு முறை ஆராயும்போது புதுப்புது விஷயங்களை பரிசளித்து வியக்க வைக்கிறது... இப்படியான திகைப்பூட்டும் உண்மைகளை கண்டறிவதற்காக, ஒவ்வொரு நாடும் புதுப்புது ஆய்வுகளை நடத்திக் கொண்டே உள்ளன... இந்தியா சார்பில் இஸ்ரோ, அமெரிக்கா நாசா என விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள், இந்த முனைப்பின் விளிம்பிலேயே இருக்கின்றன.. இந்த அபார வளர்ச்சி, விண்வெளி சுற்றுலா என்ற அளவுக்கே மனித இனத்தை கொண்டு சென்றுள்ளது...

இப்படியான விண்வெளி ஆராய்ச்சி முன்னெடுப்பில், அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான 'நாசா'வில் பங்களிப்பவர் தான் சுனிதா வில்லியம்ஸ்... இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதில் நமக்குப் பெருமை... விண்வெளிக்குப் பறந்து ஆராய்ச்சி செய்வதில் கில்லாடி வீராங்கனை... 58 வயதான சுனிதா வில்லியம்ஸ், 2006, 2012ஆகிய ஆண்டுகளில், ஆராய்ச்சிக்காகவிண்வெளிக்குப் பறந்தவர்... 322 நாள்கள் விண்வெளியில் தங்கியிருந்தார்... அதிக நேரம் விண் நடை மேற்கொண்ட வீராங்கனை என்ற பெருமைக்கு உரியவர்... அதாவது 50 மணி நேரம் 40 நிமிடங்கள்...

மூன்றாவது முறையாக விண்வெளிக்குப் பறந்துள்ளார் சுனிதா வில்லியம்ஸ்... இவருடன் பயணித்த சக வீராங்கனையின் பெயர் புட்ச் வில்மோர் 61 வயதான இவர், அமெரிக்காவைச் சேர்ந்தவர்... இவ்விருவரும், அமெரிக்காவின் விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் ஸ்டார்லைனர் வடிவமைத்த விண்கலத்தில், கடந்த 5 ஆம் தேதி விண்வெளி பயணத்தைத் தொடங்கினர்... ஃப்ளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து புறப்பட்ட இந்தப் பயணம், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை நோக்கி அமைந்தது...

25 மணி நேர பயணத்துக்குப் பிறகு, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அடைந்தது இந்த இருவர் குழு... அங்கு 9 நாள்கள் தங்கி ஆய்வு நடத்தினர்... விண்வெளியில் இருந்தபடி, சுனிதா வெளியிட்ட வீடியோவும் வைரலானது... இலக்கை எட்டியதும், சுனிதா வில்லியம்ஸ் துள்ளல் நடனமாடிய வீடியோவும், அவர் வீட்டிலிருந்து கொண்டு சென்ற மீன் குழம்பை ரசித்து ருசித்த காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றிருந்தன...

திட்டமிட்டபடி ஆய்வுகளை முடித்த பிறகு, பூமிக்குத் திரும்ப முற்பட்டனர் சுனிதா - வில்மோர் ஜோடி... இந்த இடத்தில் தான் பிரச்னை... பிரச்னை என்றால் டெக்னிக்கல் பிரச்னை... சுனிதாவும் வில்மோரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது...

திட்டமிட்டபடி எல்லாம் நல்லபடியாக நடந்திருந்தால், இவ்விருவரும் ஜூன் 22 ஆம் தேதியே பூமியில் தரையிறங்கியிருக்க வேண்டும்... ஆனால் அது நடக்கவில்லை... காரணம், அவர்கள் பயணித்த விண்கலத்தில் ஹீலியம் வாயுக்கசிவு உள்ளிட்ட தொழில்நுட்பக் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன... இதுபோன்ற தொழில்நுட்பக் கோளாறுகள் நேரிட்டால், அதை எதிர்கொண்டு சீரமைக்கும் பயிற்சிகள், அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன... எனவே அவர்கள், நிலைமையைக் கையாண்டு, நல்லவிதமாக பூமிக்கு திரும்புவார்கள், என்று நம்பிக்கை தெரிவிக்கிறது நாசா நிர்வாகம்... அவர்கள், ஜூன் மாதத்தில் பூமிக்குத் திரும்புவது சாத்தியமில்லை என்றும் நாசா தெரிவிக்கிறது..

இந்த விண்கலம் கடந்த 5 ஆம் தேதிக்கு முன்னரே புறப்பட இருந்தபோது, இதே போன்ற சில தொழில்நுட்பக் கோளாறுகள் இருந்ததாகவும், அப்போது அது சீரமைக்கப்பட்டு விட்டதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சுனிதா வில்லியம்ஸ் குழுவினருக்காக, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியையும் நாசா நாடக்கூடும் என்ற தகவலும் தெரியவருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com