வால் போன்ற தோற்றம்.. விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்த வியக்க வைக்கும் புதிய வாயுகிரகம்!
சமீபத்தில் நாசா பூமியிலிருந்து 163 ஒளியாண்டு தொலைவில் இருக்கும் ஒரு வாயுகிரகத்தை சமீபத்தில் நாசா கண்டுபிடித்துள்ளது. இந்த கிரகமானது நீண்ட வாலைக் கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதுதொடர்பாக கூடுதல் தகவல்களை பார்க்கலாம்..
வால் நட்சத்திரம் பார்த்து இருக்கிறோம்... ஆனால் வால் கிரகத்தை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா... ஆம் நாசா விஞ்ஞானிகள், சமீபத்தில் பூமியிலிருந்து 163 ஒளியாண்டுத் தொலைவில் உள்ள எக்ஸொப்ளானெட்டில் ஒன்றான WASP 69 B என்ற கிரகம் உள்ளதாக கண்டறிந்தனர். இந்த கிரமானது சுமார் ஐநூற்று அறுபத்து மூவாயிரம் கிலோமீட்டருக்கும் நீளமான வாலைக் கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
எக்ஸோப்ளானெட்... அதாவது நமது சூரிய குடும்பத்தை தாண்டி இருக்கும் கிரகங்களை விஞ்ஞானிகள் எக்ஸோப்ளானட் என்று அழைக்கின்றனர். இத்தகைய எக்ஸோபிளானட் சுமார் 5000 மேற்பட்ட கிரகங்களை கண்டறிந்து அவைகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதில் சிலவகை பூமியைப்போன்று திடமாகவும், சிலவகை வியாழன் கிரகங்களைப் போன்று வாயுக்களைக்கொண்டும் வேறு சில பனிக்கட்டி மற்றும் திரவங்களால் கொண்டதுமாக உள்ளது. இப்படி பல்வேறு வகையில் கிரகங்கள் இருந்தாலும் அவற்றை விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
அந்த வகையில, வித்தியாசமான ஒரு கிரகத்தை விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டறிந்து உள்ளனர். WASP 69 என்ற அந்த கிரகமானது முழுவதும் வாயுக்களால் நிரம்பிய கிரகம் என்றும், அது சுமார் 563000 கி.மீ நீளத்திற்கு கதிர்வீச்சுடன் கொண்ட வாயுக்களை வெளியிடுவதால் அவை வால் போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த கிரகமானது ஒவ்வொரு நொடியும் சுமார் 2 லட்சம் டன் வாயுக்களை வெளியிட்டு வருவதால் இதன் வளிமண்டலமானது ஒவ்வொரு நொடியும் தன்னுள் இருக்கும் வாயுக்களை இழந்து வருகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.