புதிய புகைப்படங்களிலும் விக்ரம் லேண்டரை காணவில்லை - நாசா

புதிய புகைப்படங்களிலும் விக்ரம் லேண்டரை காணவில்லை - நாசா
புதிய புகைப்படங்களிலும் விக்ரம் லேண்டரை காணவில்லை - நாசா

தங்கள் ஆர்பிட்டர் எடுத்துள்ள புதிய படங்களிலும் சந்திரயான்-2 விக்ரம் லேண்டரை காணவில்லை என நாசா தெரிவித்துள்ளது.

சந்திரயான் 2 விண்கலம் மூலம் நிலவின் தென் துருவத்தை ஆராய விக்ரம் லேண்டர்‌ அனுப்பப்பட்டது. நிலவில் தரையிரங்க 2 கிலோ மீட்டர் தொலைவே இருந்த நிலையில், லேண்டர்‌ உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து இஸ்ரோ பலமுறை முயற்சித்தும் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை. விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டறிய முயன்ற நாசாவின் முயற்சியும் தோல்வியடைந்தது.

இந்நிலையில், விக்ரம் லேண்டர் விழுந்த பகுதியை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் லூனார் புலனாய்வு ஆர்பிட்டர் புகைப்படங்கள் எடுத்து அனுப்பியுள்ளது. ஆனால் இந்தப் புகைப்படங்களிலும் லேண்டரை கண்டறிய முடியவில்லை என நாசா தெரிவித்துள்ளது. புகைப்படங்களை தீவிரமாக ஆராய்ந்துவிட்டதாகவும், விக்ரம் லேண்டர் விழுந்த பகுதி நிழல்கள் தென்படமுடியாதவை இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com