“வியாழன் கிரகத்தின் நிலவில் கார்பன்-டை-ஆக்சைடு!” நாசா ஜேம்ஸ் வெப் சொன்ன ஆச்சர்ய தகவல்!

சூரிய குடும்பத்தில் பூமிக்கு அடுத்தபடியாக உயிர் வாழ சாத்தியக்கூறு மிகுந்த துணைக்கோளாக யூரோப்பா விளங்குகிறது. இதில் கார்பன்-டை-ஆக்சைடு இருப்பதற்கான ஆதாரத்தை நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி நிரூபித்துள்ளது.
யூரோப்பாவில் கார்பன்-டை-ஆக்சைடு இருப்பதற்கான ஆதாரம்
யூரோப்பாவில் கார்பன்-டை-ஆக்சைடு இருப்பதற்கான ஆதாரம்முகநூல்

சூரிய குடும்பத்தில் பூமிக்கு அடுத்தபடியாக உயிர் வாழ சாத்தியக்கூறு மிகுந்த துணைக்கோளாக யூரோப்பா விளங்குகிறது. 110 க்கும் மேற்பட்ட நிலவுகள் வியாழன் கிரகத்தை சுற்றி வரும் நிலையில், பூமியை ஒத்த யூரோப்பா எனும் நிலவை (துணைக்கோள்) விஞ்ஞானிகள் 100 ஆண்டுகளுக்கு முன் கண்டறிந்து அதை ஆய்வு செய்து வருகின்றனர்.

யூரோப்பாவில் கார்பன்-டை-ஆக்சைடு இருப்பதற்கான ஆதாரம்
சந்திராயன்-3 வெற்றி: இந்திய குடிமக்களுக்கு வினாடி வினா போட்டி அறிவிப்பு! முதல் பரிசு 1 லட்சம்!

இங்கு நீர் பனிக்கட்டி, பாறைக்கு கீழ் கடல் பரப்பு, உப்பு நீர் உள்ளிட்டவை இருப்பதற்கான ஆதாரத்தை அறிவியல் ஆய்வுகள் மூலம் கண்டறிந்தாலும் உயிர்கள் வாழ தேவையான கார்பன் இருக்கிறதா என்பதை இதுவரை உறுதிப்படுத்தாமல் இருந்தது.

தற்போது நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலமாக, யூரோப்பாவில் பனிக்கட்டி மேற்பரப்பில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் கார்பன் டை ஆக்சைடு இருப்பதை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

தாரா ரெஜியோ என்ற பகுதியில் கார்பன் டை ஆக்சைடு அதிகமாக உள்ளதாகவும், புவியியல் ரீதியாக இது மிகவும் இளமையான பகுதி எனவும் கூறப்படுகிறது.

Europa Carbon Dioxide Distribution (NIRCam and NIRSpec IFU Image)
Europa Carbon Dioxide Distribution (NIRCam and NIRSpec IFU Image)Facebook

1,944 கிலோ மீட்டர் விட்டம் கொண்ட யூரோப்பாவில் 320 மீட்டர் சதுர கிலோமீட்டரில் இது கண்டறியப்பட்டுள்ளது. அடுத்த வருடம் நாசாவின் கிளிப்பர் விண்கலம் யுரோப்பாவை ஆய்வு செய்வதற்காக செல்ல உள்ளது என்பது இச்சமயம் குறிப்பிடத்தக்க ஒன்றாக கருதப்படுகின்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com