பிரபஞ்சத்தில் மர்மமான கருந்துளை: 12.9 பில்லியன் ஒளி ஆண்டுகள் பழமையானது
விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இந்த பிரபஞ்சம் குறித்தும் பல்வேறு கோள்கள் குறித்தும் தங்களது ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பிரபஞ்சத்தில் உள்ள கருந்துளைகள் அவர்களுக்கு மிகவும் மர்மமான மற்றும் சவாலான ஒன்றாகும். பல விஞ்ஞானிகள் இத்தகைய கருந்துளைகள் பற்றி தொடர்ந்து ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் அவர்களுக்கு இது புரியாத புதிராகவே உள்ளது....
இந்நிலையில், ஆராய்ச்சியாளார்களுக்கே ஆச்சர்யத்தை அளிக்கக்கூடிய விதத்தில் அதாவது சுமார் 12.9 பில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு முன்னதாகவே தோன்றியுள்ள மிகப்பிரம்மாண்ட கருந்துளை ஒன்றை விஞ்ஞானிகள் தற்சமயம் கண்டுபிடித்துள்ளனர். அந்த கருந்துளைக்கு J0410-0139 என்று பெயரிட்டுள்ளனர். இந்த கருந்துளையிலிருந்து வெளிப்படும் பிளேசர் என்று சொல்லப்படும் ரேடியேஷன் நமது பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த கருந்துளை பற்றியும் அதிலிருந்து வெளிப்படும் ஆற்றல் பற்றியும், மூத்த விஞ்ஞானி மற்றும், இண்டியன் இண்ஸ்டியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி மொகாலியில் பேராசிரியராக பணியாற்றிவரும் த.வி. வெங்கடேஸ்வரன் நம்மிடையே பேசும்பொழுது...