விரைவில் வருகிறது ‘மோடோ ஜி7’ - வாட்டர்ட்ராப் டிஸ்ப்ளே..
மோடோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான ‘ஜி7’ விரைவில் வெளியாகவுள்ளது.
பிரபல லேப்டேப் மற்றும் செல்போன் நிறுவனமான லெனோவோ மற்றொரு செல்போன் நிறுவனமான மோடோவை வாங்கிவிட்டது. இதைத்தொடர்ந்து மோடோவில் புதிய ரக ஸ்மார்ட்போன்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மோடோவின் புதிய ஸ்மார்ட்போன் ஆன ‘ஜி7’ விரைவில் வெளியாகவுள்ளது. இந்த போன் முதலில் அமெரிக்காவில் வெளியிடப்படுகிறது. அதைத்தொடர்ந்து ஐரோப்பா, ஜப்பான்,ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் வெளியிடப்படவுள்ளது. பின்னர் இந்தியாவிலும் வெளியாகும்.
இந்த போனின் சிறப்பம்சங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் இணையத்தில் வெளியாகியுள்ள தகவலின்படி, தண்ணீர் விழுந்தால் பழுதாகிவிடாத டிஸ்ப்ளேவுடன் இந்த போன் வருகிறது. அதன் அளவு 6.4 இன்ச் ஆகும். அதுமட்டுமின்றி ஒயர்லெஸ் சார்ஜர் வசதியும் உள்ளது. 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜ் இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் 12 எம்பி (மெகா பிக்ஸல்) இரட்டைக் கேமராவும், முன்புறத்தில் 16 எம்பி மற்றும் 5 எம்பி என இரட்டை செல்ஃபி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 3,500 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி உள்ளது.