இணையத்தில் தகவல்கள் கசிந்தது குறித்து 53 கோடி பயனர்களிடம் தகவல் தெரிவிக்காத ஃபேஸ்புக்

உலகளவில் மிகவும் பிரபலமான சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக் தளத்தை பயன்படுத்தி வரும் பயனர்களில் சுமார் 53 கோடிக்கும் மேற்பட்டவர்களின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் இணையத்தில் பகிர்ந்திருந்தனர்.

இந்நிலையில் இணையத்தில் கசிந்த தகவல்களுடன் தொடர்புடைய பயனர்களுக்கு எந்தவொரு நோட்டிபிகேஷனும் கொடுக்க பேஸ்புக் திட்டமிடவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2019இல் பேஸ்புக் தளத்தில் இருந்த ஒரு அம்சத்தை பயன்படுத்தி இந்த தரவுகளை ஹேக்கர்கள் நெட்டிலிருந்து திருடியுள்ளனர். தொடர்ந்து அதனை தற்போது கசிய விட்டுள்ளனர் என இந்த செய்தியை வெளியிட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது. 

“பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு இது குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியட வேண்டாம் என திட்டமிட்டுள்ளதாம். இருந்தாலும் 2019இல் அந்த சம்பவத்திற்கு பிறகு இந்த சிக்கலுக்கு தீர்வு கண்டுள்ளோம். கசிந்த தகவலில் பயனர்களின் நிதி விவரங்கள், ஆரோக்கிய விவரங்கள் மற்றும் பாஸ்வேர்டுகள் இல்லை” என பேஸ்புக் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருந்தாலும் கசிந்த தகவல்கள் மதிப்பு மிக்கவை என்றும். அதனால் பயனர்கள் ஹேக் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இணையத்தில் கசிந்த 53 கோடி பயனர்களில் இந்தியாவைச் சேர்ந்த 61 லட்சம் பேரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com