ஆன்லைன் பணப் பறிமாற்றத்துறையில் வாட்ஸ் ஆப்பும் விரைவில் களமிறங்க உள்ளது. அதனுடன் ஃபேஸ்புக், கூகுள்
ஆகிய நிறுவனங்களும் இறங்கத் தயாராகி வருகின்றன.
ஏற்கனவே பணப் பறிமாற்றத்துறையில் ஏர்டெல் மணி, ஓலா மணி போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இப்போது வாட்ஸ் ஆப் நிறுவனம், ஆன்லைன் பணப்பரிமாற்றதிற்கான அனுமதியும் இதற்காக வங்கிகளுடன் இணைந்து செயல்படுவதற்கான அனுமதியையும் தேசிய பணப்பறிமாற்ற கழகத்திடமிருந்து (National Payments Corporation of India - NPCI) பெற்றுள்ளது.
ஏற்கனவே என்பிசிஐ அறிமுகப்படுத்தியுள்ள யுபிஐ (UPI) என்னும் மொபைல் அப்ளிக்கேஷன் மூலம் மக்கள் மொபைல் மூலமாக வேகமான பண பரிமாற்றத்தை செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்ளிகேஷன் மூலம் எல்லா வங்கி கணக்குகளுக்கும் பணம் செலுத்த இயலும்.
இந்த நிலையில் கூகுள், ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப் ஆகிய மூன்று நிறுவனங்களும் பணப் பரிமாற்ற வர்த்தகத்துக்குள் நுழைய ஆர்வமாக உள்ளன. ஆனால் இதற்கான முறையான தகுதியை இந்நிறுவனங்களுக்கு ஆர்பிஐ தான் வழங்க வேண்டும். அப்படி ஆர்பிஐ அனுமதி வழங்கும் பட்சத்தில் இம்மூன்று நிறுவனங்களும் பணப்பறிமாற்றத் துறைக்குள் வரும் என என்பிசிஐ-ன் தலைமை அதிகாரியான ஏபி ஹோடா, தெரிவித்துள்ளார்.
அதே சமயம் இதற்கான சாத்தியங்கள் இருந்தும் நமது இந்திய வங்கிகள் உரிய முயற்சிகள் எடுக்காமல் இருப்பது வருத்தமான விஷயம் எனவும் ஏபி ஹோடா தெரிவித்துள்ளார்.