பவர் பேங்காகவும் பயன்படும் மொபைல்.. அறிமுகமானது இன்போகஸ் டர்போ- 5

பவர் பேங்காகவும் பயன்படும் மொபைல்.. அறிமுகமானது இன்போகஸ் டர்போ- 5
பவர் பேங்காகவும் பயன்படும் மொபைல்.. அறிமுகமானது இன்போகஸ் டர்போ- 5

இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போனை இன்ஃபோகஸ் இன்று அறிமுகம் செய்துள்ளது.

இன்ஃபோகஸ் நிறுவனத்தின் டர்போ 5 என்கிற ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் இன்று அறிமுகமாகியுள்ளது. சகல வசதிகளுடன் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமே பேட்டரி தான். 5000 மில்லி ஆம்பியர் திறன் கொண்ட பேட்டரி இதில் உள்ளது.  பொதுவாக 8000 ரூபாய்க்குள் வாங்கும் மொபைல்களில் 3000 மில்லி ஆம்பியர் முதல் 4000 மில்லி ஆம்பியர் வரை மட்டுமே அதிகப்பட்சமான பேட்டரி திறனாக இருந்த நிலையில் இந்த போனில் 5000 மில்லி ஆம்பியர் கொண்ட பேட்டரி உள்ளது வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும். அதுமட்டுமின்றி, இந்த பேட்டரியின் மற்றொரு சிறப்பு ரிவர்ஸ் சார்ஜிங் வசதி. மூன்று நாட்கள் கூட ஜார்ஜ் நிற்கும் என்பதால் இந்த பேட்டரியை பவர் பேங்காக கூட பயன்படுத்தி மற்ற மொபைல் போன்களையும் நீங்கள் சார்ஜ் செய்து கொள்ளலாம்.

2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி இன்பில்ட் மெமரி வசதியுடன் ரூபாய் 6,999-க்கும், 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்பில்ட் மெமரியுடன் ரூபாய் 7,999-க்கும் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

5.2 இன்ச் ஹெச்.டி. தொடுதிரை, 13MP பின்புற கேமரா, 5MP செல்ஃபி கேமரா, ஜியோ சிம்கார்ட் பயன்படுத்த தேவையான VoLTE, 32GB மெமரிகார்ட் வசதி ஆகிய பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. ஜூலை 4-ஆம் தேதி முதல் அமேசான் இணையதளம் மூலம் பிரத்யேகமாக இந்த மொபைலை பதிவு செய்யலாம்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com