”AI தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்துகிறோம் என்பது முக்கியமானது”- PTR பேச்சை கேட்க குவிந்த கூட்டம்!

உலக முதலீட்டாளர் மாநாட்டில் பேசியிருக்கும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், AI தொழில்நுட்பத்தால் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று கூறியுள்ளார்.
பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன்PT

சென்னையில் நடைபெற்ற “உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024” மூலம் ரூ.5.5 லட்சம் கோடி முதலீடுகள் கிடைக்கும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பல்வேறு எதிர்ப்பார்ப்புகளுக்கிடையே தொடங்கப்பட்ட உலக முதலீட்டாளர் மாநாட்டின் முதல் நாளிலேயே இலக்காக வைக்கப்பட்ட ரூ.5.5 லட்சம் கோடி முதலீட்டை எட்டி சாதனைபடைத்தது.

50-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தொழில்நிறுவனத் தலைவர்களும், 450க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு அதிகப்படியான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். கோத்ரேஜ், பெகாட்ரா, டிவிஎஸ், ஹூண்டாய், ஜேஎஸ்டபள்யு, டாடா எலக்ட்ரானிக்ஸ், வின்ஃபாஸ்ட் முதலிய நிறுவனங்கள் அதிக முதலீட்டில் ஒப்பந்தம் செய்தனர். முதல் நாளில் கவனிக்கப்பட்ட முதலீடாக ரூ.16,000 கோடியில் ஒப்பந்தம் செய்யப்பட்ட வின்ஃபாஸ்ட் நிறுவன ஒப்பந்தம் பார்க்கப்பட்டது.

உலக முதலீட்டாளர் மாநாடு
உலக முதலீட்டாளர் மாநாடு

இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று அதிகப்படியான முதலீட்டின் மூலம் டாடா மற்றும் அதானி குழுமம் இரண்டும் மாநாட்டில் கவன் ஈர்த்தன. டாடா நிறுவனம் ரூ.70,800 கோடி முதலீடு மற்றும் அதானி குழுமத்தின் ரூ.42,768 கோடி முதலீடு முதலிய ஒப்பந்தத்தின் மூலம் ஒட்டுமொத்த 2024 உலக முதலீட்டாளர் மாநாடு ரூ.6.64 லட்சம் கோடி ஒப்பந்தத்தை எட்டி சாதனை படைத்துள்ளது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024
உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024

இந்நிலையில் உலக முதலீட்டாளர் மாநாட்டில் இரண்டாவது நாளான இன்று உரையாற்றிய தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், AI தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார். அப்போது அவரது பேச்சை கேட்பதற்காக அதிகப்படியான மக்கள் அரங்கில் கூடியிருந்தனர்.

AI மூலம் வேலைவாய்ப்பை உருவாக்கவும் முடியும், பறிக்கவும் முடியும்!

உலக முதலீட்டாளர் மாநாட்டில் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “மனிதர்கள் போல் செயல்படும் வகையிலான கணிணிகள் அதிகளவில் அறிமுகத்திற்கு வரத்தொடங்கிவிட்டன, மக்களும் AI தொழில்நுட்பம் போன்றவற்றைவ் வரவேற்கவும் செய்துவிட்டனர். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் எப்படி வேலைவாய்ப்புகளை உருவாக்க முடிகிறதோ, அதேபோல பறிக்கவும் முடியும்.

பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன்

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஆங்கிலம், தமிழ் மற்றும் பிற மொழிகளில் கண்டன்ட்களை உருவாக்கினால் அது வேலைவாய்ப்புகளை உருவாக்கும். அதேநேரத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் DeepFake உள்ளிட்ட எதிர்மறையான தாக்கங்களும் அதிகரித்துள்ளன. பல நாடுகளில் Al தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேர்தலில் முறைகேடுகள் செய்வதையும் நம்மால் காணமுடிகிறது.

அதனால் எந்த விஷயமாக இருப்பினும் அதிகாரப்பூர்வ மற்றும் நம்பகத்தன்மையை சரிபார்ப்பதில் முக்கியத்துவம் செலுத்த வேண்டும். அதேநேரம் மனிதர்களால் ஏற்படும் அழிவு மற்றும் இழப்பை AI தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி சரி செய்யவும் முடியும்” என்று கூறிய அவர் எப்படி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம் என கூறியுள்ளார்.

பெங்களூரை விட முன்னேறிய நகரமாக சென்னை மாறும்!

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் சென்னை போன்ற இடங்களில் அதிகப்படியான Data Centers அமைக்கப்படுவது குறித்த அறிவிப்புகள் வந்துள்ளன. அதன்முதல்படியாக சென்னை அம்பத்தூரில் ரிலையன்ஸ் டேட்டா சென்டரை நானும் திறந்துவைக்கவிருக்கிறேன். இதன்மூலம் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் ஏற்படும். ஏற்கனவே ஒரு மாதத்திற்கு 10000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் துறையாக தமிழக தொழில்நுட்பத்துறை திகழ்கிறது. இதை மேலும் முன்னேற்றும் விதமாக இந்த அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன்

அதேபோல மார்க்கெட்டிங் துறையில் சென்னை மற்றும் தமிழகம் ஒப்பீட்டளவில் பெங்களூர், ஹைத்ராபாத்துடன் பின்தங்கியிருக்கிறது. அதை முன்னேற்றும் வகையில் ஃப்ரெஸ் ஒர்க்ஸ் சிஇஒ-விடமும் பேசியிருக்கிறேன். விரைவில் அனைத்துவிதத்திலும் தொழில்நுட்பத்துறையில் தமிழ்நாடு முன்னேறிய ஒரு மாநிலமாக மாறும்” என்று பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com