கிரகங்களை உமிழும் பால்வெளியின் கருந்துளை

கிரகங்களை உமிழும் பால்வெளியின் கருந்துளை
கிரகங்களை உமிழும் பால்வெளியின் கருந்துளை

சூரிய குடும்பத்தை உள்ளடக்கிய பால்வெளியின் மையத்தில் உள்ள கருந்துளை எனப்படும் ப்ளாக் ஹோல் (Black hole) பூமி அளவிலான கிரகங்கள் போன்ற பொருட்களை தொடர்ந்து உமிழ்ந்து வருவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பால்வீதி மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்களை உள்ளே இழுக்கும் கருந்துளை பின்னர் கிரகங்கள் போன்ற பொருட்களாக வெளியே உமிழ்கிறது என அவர்கள் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக ஆய்வு நடத்திய இங்கிலாந்தின் ஹார்வார்டு பல்கலைக்கழக ஆய்வாளர் எடென் கிர்மா, பால்வெளியின் மையத்தில் உள்ள ஒரே ஒரு நட்சத்திரத்தை மட்டுமே உள்வாங்கி கிரகங்கள் போன்ற அளவில் உள்ள எண்ணற்ற பொருட்களை உருவாக்க முடியும் என்பது ஆச்சரியத்திற்குரியது என்று கூறியுள்ளார். அப்படி உருவாக்கப்பட்டு வெளியேற்றப்படும் கிரகங்கள் எங்கே செல்கின்றன?. எங்கு பயணத்தை முடிக்கும் என்பதும் மர்மமாகவே இருக்கிறது. இந்த கேள்விகளுக்கு விடையளிக்கும் பொருட்டு கணினி உதவியுடன் கூடிய புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளதாக எடென் கிர்மா தெரிவித்துள்ளார். இந்த கருந்துளையானது கிரகங்கள் போன்ற பொருட்களை விநாடிக்கு 10,000 கி.மீ. வேகத்திலும் மணிக்கு 36 கி.மீ. வேகத்திலும் உமிழ்வதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com