பணிநீக்க நடவடிக்கைக்கு பின் முடங்கிய மைக்ரோசாப்ட் ! பல நாடுகளில் சேவைகள் பாதிப்பு!

பணிநீக்க நடவடிக்கைக்கு பின் முடங்கிய மைக்ரோசாப்ட் ! பல நாடுகளில் சேவைகள் பாதிப்பு!
பணிநீக்க நடவடிக்கைக்கு பின் முடங்கிய மைக்ரோசாப்ட் ! பல நாடுகளில் சேவைகள் பாதிப்பு!

தொழில்நுட்ப நிறுவனாமன மைக்ரோசாப்ட் டெக்னாலஜியின் எம்எஸ் சேவைகளான அவுட்லுக், மைக்ரோசாப்ட் டீம்ஸ், அஸ்ஸூர், எம்எஸ் 365 முதலிய சேவைகள் உலக அளவில் முற்றிலுமாக முடங்கியுள்ளது.

இன்றைய அதிகாலை முதலே உலகம் முழுவதும் ஒரேநேரத்தில் இந்தியா, பிரிட்டன், ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் முதலிய நாடுகளில் மைக்ரோசாப்ட் சேவைகள் முற்றிலுமாக முடங்கியது. இதில் அதிகபட்சமாக இந்தியாவில் 3700 பயணாளர்கள் மற்றும் பிரிட்டனில் மட்டும் 5000க்கும் மேற்பட்ட பயணாளர்களால் ரிப்போர்ட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஒ சத்யா நாதெல்லா, உலகளவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தார். அந்த அறிவிப்பில், “பணிநீக்க நடவடிக்கையானது பொருளாதாரத்தின் காரணமாகவும், பயனாளர்களின் முன்னுரிமை காரணங்களுக்காகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டப்பட்டது. மேலும் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு ஹெல்த் பெனிபிட்ஸ் போன்ற சலுகைகளும் அறிவிக்கப்பட்டது. மேலும் பணிநீக்க நடவடிக்கையானது அமெரிக்காவில் முதல் தொடங்கி, பின்னர் மற்ற நாடுகளில் விரிவுபடுத்தப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அவுட்லுக், மைக்ரோசாப்ட் டீம்ஸ், அஸ்ஸூர், எம்எஸ் 365 முதலிய சேவைகள் அனைத்தும் இந்தியாவில் முடங்கியுள்ளன. மைக்ரோசாஃப்ட் அவுட்லுக் மூலம் மின்னஞ்சல்களை அனுப்புவது மற்றும் பெறுவதிலும் இந்தியா டுடே டெக்னாலஜி குழுவும் பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. மைக்ரோசாப்ட் சேவைகள் முடங்கியுள்ளதால், பணியாளர்களும் பணிசெய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் 3000க்கும் மேற்பட்ட பல வாடிக்கையாளர்கள் தங்களால் மைக்ரோசாப்டின் எந்த சேவையையும் பயன்படுத்தமுடியவில்லை என்று ரிப்போர்ட் செய்துள்ளதாக, அவுட்டேஜ் டிராக்கிங் இணையதளமான டவுன் டிடெக்டர் தெரிவித்துள்ளது.

தற்போது சேவை முடக்கம் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம், “ நெட்வொர்க்கிங் கட்டமைப்பு பிரச்சனைகளை சரிசெய்ய தனிகவனம் செலுத்தி வருகிறோம். சிக்கல்கள் தொடர்ந்து அதிகமாவதை தடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தது. பின்னர் அடுத்த அப்டேட்டாக சிக்கல்களை மீட்டெடுக்கும் வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாக மைரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பணிநீக்கம் முதலிய கடினமான நேரத்தில் ஒரு ப்ரேக் கிடைத்திருப்பதாக, ஊழியர்கள் பலர் மீம்களை பகிர்ந்து டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். வேலை முதலிய அறிவிப்புகள் அவுட்லுக் மூலம் தான் கிடைக்கும் என்பதால் மைக்ரோசாப்ட் ஊழியர்களுக்கு பெரிய பிரேக் கிடைத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com