விண்டோஸ் 11 இயங்குதளத்தை உலக அளவில் இலவச அப்கிரேடாக அறிமுகம் செய்துள்ளது மைக்ரோசாஃப்ட்!

விண்டோஸ் 11 இயங்குதளத்தை உலக அளவில் இலவச அப்கிரேடாக அறிமுகம் செய்துள்ளது மைக்ரோசாஃப்ட்!
விண்டோஸ் 11 இயங்குதளத்தை உலக அளவில் இலவச அப்கிரேடாக அறிமுகம் செய்துள்ளது மைக்ரோசாஃப்ட்!

மைக்ரோசாஃப்ட் நிறுவன தயாரிப்பான விண்டோஸ் 11 இயங்குதளம் உலக நாடுகளில் இலவச அப்கிரேடாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கணினிகளை இயக்க உதவும் இயங்குதளத்தை கடந்த 1985-வாக்கில் முதன்முதலாக அறிமுகம் செய்ததிருந்தது அந்நிறுவனம். அப்போது விண்டோஸ் 1.0. அப்படியே படிப்படியாக வளர்ந்து இன்று வெர்ஷன் 11 வரை விண்டோஸ் வந்துள்ளது. 

“பயனர்களுக்கு புதிய மற்றும் எளிமையான பயனர் அனுபவத்தை கொடுக்கும் நோக்கில் விண்டோஸ் 11 கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனை தொழில்நுட்ப நுணுக்கங்கள் சார்ந்த வல்லுனர்கள் மட்டுமல்லாது அனைவரும் சுலபமாக அப்கிரேட் செய்யலாம். 

இந்த இயங்குதளத்தை வெள்ளோட்டம் பார்த்த வல்லுனர்கள் இதில் எந்தவித சிக்கலும் இல்லை என தெரிவித்துள்ளனர். 

வழக்கமாக விண்டோஸ் இயங்கு தளங்களில் ஸ்டார்ட் மெனு இடது பக்கம் தான் இருக்கும். விண்டோஸ் 11-இல் அது திரையின் மைய பகுதிக்கு மாறியுள்ளது. டாஸ்க் பார் ஐகான்களுக்கு மத்தியில் இது அமைந்துள்ளது. அதே போல விண்டோஸ் 10-இல் ஸ்டார்ட் மெனுவில் இருந்து டைல்ஸ் ஆப்ஷனை இந்த புது வெர்ஷனில் டிராப் செய்யப்பட்டுள்ளது. 

மக்கள் கணினியை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்துக் கொண்டு அதன் அடிப்படையில் இந்த புதிய இயங்குதளம் கட்டமைக்கப்பட்டது. புதிய சகாப்தத்தின் தொடக்கமாக விண்டோஸ் 11 அமைந்துள்ளது. விட்ஜெட்ஸ் பேனலும் இதில் உள்ளது. இவை அனைத்தையும் விட ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்களை அமேசான் ஆப் ஸ்டோர் மூலமாக விண்டோஸ் 11-இல் இயக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு. TPM செக்யூரிட்டி சிப் கொண்ட மாடர்ன் கம்யூட்டர்களில் மட்டுமே இந்த புதிய இயங்குதளத்தை அப்கிரேட் செய்து பயன்படுத்த முடியும்” என தெரிவித்துள்ளார் விண்டோஸ் தலைமை புரோடக்ட் அதிகாரி பனோஸ் பனே (Panos Panay). 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com