\
பெயின்ட்டுக்கு மூடுவிழா… மைக்ரோசாப்ட் விளக்கம்

பெயின்ட்டுக்கு மூடுவிழா… மைக்ரோசாப்ட் விளக்கம்

பெயின்ட்டுக்கு மூடுவிழா… மைக்ரோசாப்ட் விளக்கம்
Published on: 

எம்எஸ் பெயின்ட் செயலி முற்றிலுமாக கைவிடப்படவில்லை என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

இதுதொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிளாக் போஸ்டில் கூறப்பட்டிருப்பதாவது: பெயின்ட் செயலியின் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. அந்த செயலிக்கு மூடுவிழா நடத்தப்படவில்லை. சமீபத்தில் வெளியிடப்பட்ட விண்டோஸ் 10 கிரியேட்டர்ஸ் அப்டேட்டில் பெயின்ட் செயலி இடம்பெறவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், பழைய பெயின்ட் செயலியின் போட்டோ எடிட்டிங் உள்ளிட்ட பெரும்பாலான வசதிகள் புதிதாக வெளியிடப்பட்டுள்ள பெயின்ட் 3டி செயலியில் இடம்பெற்றுள்ளன.

கடந்த 32 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கும் பெயின்ட் செயலிக்கு ரசிகர்கள் அதிகம் இருப்பதை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம். எனவே பெயின்ட் செயலி முழுமையாக கைவிடப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்வதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 32 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கும் பெயின்ட் கிராபிக்ஸ் செயலிக்கு மூடுவிழா நடத்த மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்ததாக செய்திகள் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த விளக்கத்தைக் கொடுத்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com