மைக்ரோமேக்ஸ்-ன் பாரத் 2 ப்ளஸ், 3, 4 அறிமுகம்

மைக்ரோமேக்ஸ்-ன் பாரத் 2 ப்ளஸ், 3, 4 அறிமுகம்
மைக்ரோமேக்ஸ்-ன் பாரத் 2 ப்ளஸ், 3, 4 அறிமுகம்

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் பாரத் 2 பிளஸ், பாரத் 3 மற்றும் பாரத் 4 ஸ்மார்ட்ஃபோன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  

வாடிக்கையாளர்களிடையே அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் 3 வகையிலான ஸ்மார்ட்ஃபோன்கள் அதன் இணையதள பக்கத்தில் முழு விவரங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆனால், அவற்றின் விலை குறிப்பிடப்படவில்லை. இந்த ஸ்மார்ட்ஃபோன்களின் சிறப்பம்சங்கள்: 

மைக்ரோமேக்ஸ் பாரத் 2 ப்ளஸ்

WVGA TFT 480x800 பிக்சலுடன் கூடிய 4 இன்ச்  டிஸ்ப்ளே, 7.0 நௌகட், 25 x 63.4 x 10.8 mm, 5 எம்பி ரியர் கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா, 1 ஜிபி ரேம், 8 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், டூயல் சிம், ஜிபிஎஸ், வை-ஃபை, ப்ளூடூத், GPS, WAP, 120 கிராம் எடை கொண்ட இந்த ஃபோன் 1600 mAh பேட்டரி கொண்டது ஆகும். 

மைக்ரோமேக்ஸ் பாரத் 3

WVGA TFT 480x854 பிக்சலுடன் கூடிய 4.5 இன்ச் டிஸ்ப்ளே, 7.0 நௌகட், 1 ஜிபி ரேம் , 8 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், மைக்ரோSD யுடன் கூடிய 32 ஜிபி வரை நீட்டிக்கும் திறன், 2 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா, டூயல் சிம், வைஃபை, ப்ளூடூத், மற்றும் 2000 mAh பேட்டரி திறன் உள்ளிட்ட சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. 

மைக்ரோமேக்ஸ் பாரத் 4

5.0 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, 7.0 நௌகட், 1 ஜிபி ரேம், 8 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 5 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க மற்றும் ரியர் கேமரா, டூயல் சிம் ஸ்லாட், 2500 எம்ஏஎச் பேட்டரி திறன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com