ட்விட்டரை ஓரம்கட்டுமா 'Threads'? லோகோவில் இருப்பது தமிழ் எழுத்து ‘கு’-வா..? கலாய்க்கும் நெட்டிசன்கள்

ஏகப்பட்ட புதுமையுடன் பயன்பாட்டிற்கு வந்துள்ள Threads-ன் லோகோவானது தமிழ் எழுத்தான கு போன்று இருப்பதாக பலரும் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Threads
ThreadsFile image

மெட்டா நிறுவனம் தனது ஃபேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம், வாட்ஸ் செயலிகளின் வரிசையில் “Threads” என்ற புது செயலியை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

அதென்ன Threads?

Threads என்பது இது ஒரு சமூக வலைதளம். இது ட்விட்டர் சமூக வளைதளத்திற்கான மாற்று செயலி என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இயங்கி வரும் ட்விட்டர் தன் தளத்தில் புதுமையை ஏற்படுத்த விரும்பி எண்ணற்ற மாற்றங்களை செய்து வருகிறது

இந்நிலையில், ட்விட்டருடன் போட்டியிடும் விதமாக, Threads ஜூலை 6ம் தேதி அமெரிக்காவிலும், 7ம் தேதி மற்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்திருந்தது மெட்டா. அப்படியான நிலையில், இரண்டு நாட்கள் முன்னதாகவே அதாவது (அமெரிக்க நேரப்படி) ஜுலை 5 ம் தேதி மாலை 7 மணி அளவில் உலகெங்கும் Threads செயலி பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.

அறிமுகம் செய்யப்பட்ட சிலமணி நேரங்களுக்குள் Threads செயலியானது மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கத்து. இருப்பினும் இதன் வலைதளம் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. தற்போதைக்கு மொபைலில் ஆப் டவுன்லோட் செய்யும் வசதி மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதை பயன்படுத்துவதும் எளிதானது. ஆண்ட்ராய்டு போனில் ஆப் ஸ்டோரிலிருந்து ”Threads” செயலியை டவுன்லோட் செய்துகொள்ளலாம். அப்படி டவுன்லோட் செய்ததும் இன்ஸ்டா கணக்கு விவரங்களை அது கேட்கிறது. ஒப்புதல் அளித்தவுடன் ப்ளூ டிக்குடன் பயன்பாட்டிற்கு வருகிறது .

Threads-ல் டெக்ஸ்ட், லிங்க், போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவிடமுடியும் . இதில் போட்டோக்களுக்கு எண்ணிக்கை அடிப்படையிலும் வீடியோக்களுக்கும் நிமிட அடிப்படியிலும் பதிவேற்றம் செய்யும் படி வரையறுக்கப்பட்டுள்ளாது. facebook ல் இருக்கும் option போலவே இதில் நாம் பதிவிடும் பதிவிற்கு அனைவரும் பதிலளிப்பதை கட்டுப்படுத்தவும், நம் பதிவை மறுபதிப்பு செய்யவும், இன்ஸ்டாவில் ஷேர் செய்யவும் முடியும்.

Threads-ல் புதிய தலைமுறை!
Threads-ல் புதிய தலைமுறை!

பலராலும் விரும்பப்பட்டு வரும் Threads-ன் லோகோ, தமிழ் எழுத்தான கு வடிவில் இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்துவருகின்றனர். ஒருசிலர் மலையாள எழுத்து போல இது இருப்பதாக சொல்ல, இன்னும் சிலர் நகைச்சுவையாக இந்த லோகோ ஜிலேபியை போல உள்ளது என்று சொல்லி வருகின்றனர்.

அந்தவகையில், ஏகப்பட்ட புதுமையுடன் பயன்பாட்டிற்கு வந்துள்ள Threads-ன் லோகோதான், இப்போது இணையவாசிகளின் டார்கெட். ஒருசிலர் இது தூர்தர்ஷன் டெலிகாஸ்டிங் மாதிரி இருப்பதாகவும், ட்விட் செய்து வருகிறார்கள். ஒரு நெட்டிசன், Thread லோகோ, காது வடிவத்தில் இருப்பதாக கூறியுள்ளார்!

வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டெலிகிராம், ட்விட்டர் வரிசையில் Threads-ம் மக்களின் முழு பயன்பாட்டிற்கு இன்னும் ஒருசில நாட்களில் வந்துவிடும் என்று நம்பப்படுகிறது. இன்னொருபக்கம் ட்விட்டருக்கு மாற்று எனப்படும் Threads, இப்போ ட்விட்டரில் டாப் ட்ரெண்டிங்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com