யாகூ-க்கு குட்பாய்.... இனி அல்டாபா...!

யாகூ-க்கு குட்பாய்.... இனி அல்டாபா...!

யாகூ-க்கு குட்பாய்.... இனி அல்டாபா...!
Published on

பிரபல இணைய தேடு பொறி நிறுவனமான யாகூ நிறுவனத்தின் பெயர் அல்டாபா (Altaba) என மாற்றப்பட உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு யாகூவின் பயனாளர்கள் கணக்கு திருடப்பட்டன. இதனையடுத்து மாபெரும் மாறுதல்களை நடைமுறைபடுத்தும் நோக்கில் யாகூவின் பெயர் அல்டாபா என மாற்றப்பட உள்ளது. மேலும் இந்த நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குநராக இருக்கும் மரிசா மேயரும், அந்த நிறுவனத்தின் ஐந்து முக்கிய தலைமை பொறுப்பில் உள்ளவர்களும் பதவி விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் யாகூவின் இயக்குனர் எரிக் பிராண்டே தலைமை செயல் இயக்குநராக பொறுப்பு ஏற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com