சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலும் நுண்ணுயிரிகள்... ஆய்வில் இணையும் சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள்!

சர்வதேச விண்வெளி மையத்தில் ஈர்ப்பு விசை இல்லாத சூழலில் நுண்ணுயிர்கள் வாழ்வது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நாசா விஞ்ஞானிகளோடு இணைந்து, சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள், மருந்து-எதிர்ப்பு நோய்க்கிருமிகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
சர்வதேச விண்வெளி மையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட Enterobacter bugandensis பாக்டீரியா
சர்வதேச விண்வெளி மையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட Enterobacter bugandensis பாக்டீரியாநாசா

நுண்ணுயிரிகள்

நுண்ணுயிரிகளான வைரஸ், அமீபா தொடங்கி பாக்டீரியா, பூஞ்சைகள் என மைக்ரோ மீட்டர் கொண்ட ஒரு செல் உயிரினங்கள் ஆகும். நமது ஒரு தலை முடியை ஆயிரம் ஆக பிரித்தால் எவ்வளவு சிறிதாக இருக்கும் அதைத்தான் ஒரு மைக்ரோ மீட்டர் எனக் கூறுகிறார்கள்.

NGMPC22 - 147

உருவில் மிகச்சிறியதாகவும் இந்த உலகை உருவாக்கியவையாகவும் நுண்ணுயிரிகள்தான் இருக்கின்றன. மனித உடலிலும் கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் நம்மை வாழவைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த நுண்ணுயிரிகள் நமது உடலுக்கு சாதகமாகவும் இருக்கலாம், பாதகமாகவும் இருக்கலாம்.

அப்படி ஒரு நுண்ணுயிரிதான் கொரோனா வைரஸ். கொரோனா வைரஸ் இதுவரை 5000 க்கும் மேற்பட்ட முறை உருமாற்றம் அடைந்துள்ளது. ஒரு செல் பெற்றிருப்பதால் பொதுவாக நுண்ணுயிரிகள் அடிக்கடி உருமாற்றம் அடைகிறது. இந்நிலையில்தான் காற்று புகாத புவி ஈர்ப்பு விசை இல்லாத சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலும் நுண்ணுயிரிகள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

சர்வதேச விண்வெளி மையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட Enterobacter bugandensis பாக்டீரியா
விண்வெளி நிலையத்தில் உருவான ‘உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய பாக்டீரியா' பற்றிய முழு விவரம்!

இதையடுத்து, சென்னை ஐஐடி பேராசிரியர் கார்த்திக் ராமன், மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானி டாக்டர் கஸ்தூரி வெங்கடேஸ்வரன் ஆகியோர் நாசா விஞ்ஞானிகளோடு இணைந்து சர்வதேச விண்வெளி மையத்தில் மருந்து-எதிர்ப்பு நோய்க்கிருமிகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் நுண்ணுயிரிகள் எவ்வாறு வளர்கின்றன என்பது குறித்தான ஆராய்ச்சிகள் மூலம் நுண்ணுயிரிகள் உருமாற்றம் மூலம் சூழலுக்கு ஏற்றார் போல எவ்வாறு தற்காத்துக் கொள்கின்றன என்பதை புரிந்து கொள்ள முடிகிறது” எனகின்றனர் விஞ்ஞானிகள். இப்புரிதல்கள் மூலம் நுண்ணுயிரிகளை அழிப்பதற்கான மருந்துகளையும் கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

ஐஐடி பேராசிரியர் கார்த்திக் ராமன்
ஐஐடி பேராசிரியர் கார்த்திக் ராமன்

மருத்துவம், நுண்ணுயிரியல், விண்வெளி அறிவியல் துறைகளை சேர்ந்த பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் இணைந்து ஆராய்ச்சி செய்வதால், கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகளின் பண்புகளை அறிந்து கொள்வதற்கும் அதன் மாற்றங்களை முன்கூட்டியே அறிவதற்கும் எளிதாக இருக்கும். இதனால் வருங்காலத்தில் மனிதர்களை தாக்கும் நோய்களுக்கான மருந்துகளை உருவாக்க முடியும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் சென்னை ஐஐடி பேராசிரியர் கார்த்திக் ராமன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com