\
எப்போதும் பேட்டரிடவுன் பயமா? விற்பனைக்கு வந்தது லெனோவோ பவர்பேங்க்...

எப்போதும் பேட்டரிடவுன் பயமா? விற்பனைக்கு வந்தது லெனோவோ பவர்பேங்க்...

எப்போதும் பேட்டரிடவுன் பயமா? விற்பனைக்கு வந்தது லெனோவோ பவர்பேங்க்...
Published on

லெனோவோ 10,000mAh திறன் பெற்ற MP1060 பவர்பேங்க், பிரத்யேகமாக ஆன்லைன் போர்ட்டல் ஃப்ளிக்கார்ட்டில் 1,299 ரூபாய் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

முந்தைய மாடலை விட குறைந்த விலையில் வந்திருக்கும் புதிய பவர்பேங்க் மிக சிறப்பான செயல்திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. லித்தியம் பாலிமர் பேட்டரி கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள இந்த பவர்பேங்க், 3.7V கொண்ட 10,000 எம்.ஏ.ஹெச் திறன் கொண்டதாகவும், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளம் பெற்ற மொபைல், டேப்ளெட் தவிர டிஜிட்டல் கேமரா போன்றவற்றுடன் கேம் கருவிகளையும் சார்ஜ் செய்யும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

200 கிராம் எடைகொண்ட MP1060 பவர்பேங்க் கருவியுடன் மைக்ரோ யூஎஸ்பி மற்றும் வெடிக்கும் அபாயகளற்ற தொழில்நுட்பம் உள்ளிட்ட 11 விதமான பாதுகாப்பு அம்சங்களையும் லெனோவா MP1060 பெற்றுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com