லெனோவா நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான K8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கே சீரிஸ் வரிசையில் லெனோவா K8 நோட், K8 ப்ளஸ் ஸ்மார்ட்போன்களை லெனோவா அறிமுகம் செய்திருந்த நிலையில் தற்போது K8 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன், மற்ற K சீரிஸ் வரிசையில் உள்ள ஸ்மார்ட்போன்களை விட விலை குறைவானதாகும். இதன் விலை 10,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மற்ற லெனோவா கே சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இருப்பதை போன்ற, பின்பக்கம் இரட்டை கேமரா கொண்ட அமைப்பு வசதி இந்த K8 ஸ்மார்ட்போனில் இல்லை.
லெனோவா K8 சிறப்பம்சங்கள்
* 13 மெகாபிக்சல் பின்பக்க கேமரா, எல்ஈடி ஃப்ளாஷ் வசதி.
* 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா.
* 5.2 அங்குல ஹெச்டி டிஸ்ப்ளே.
* 3 ஜிபி ரேம் வசதி மற்றும் 32 ஜிபி இன்பில்ட் மெமரி வசதி.
* பின்புறம் கைரேகை ஸ்கேனர் வசதி.
* 4000 மில்லி ஆம்பியர் பேட்டரி.
* ஆன்ட்ராய்டு 7.1.1 நௌகாட் இயங்குதளம்.
சில்லறை விற்பனை கடைகளில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.