பட்ஜெட் விலையில் அறிமுகமான லாவா Z2 மேக்ஸ் போன்!

பட்ஜெட் விலையில் அறிமுகமான லாவா Z2 மேக்ஸ் போன்!

பட்ஜெட் விலையில் அறிமுகமான லாவா Z2 மேக்ஸ் போன்!
Published on

கொரோனா பெருந்தொற்று நோய் பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. அதனால் ஆன்லைன் வகுப்புக்கு மாணவர்களும், ஆசிரியர்களும் திரும்பியுள்ள நிலையில் பட்ஜெட் விலையில் லாவா Z2 மேக்ஸ் போனை அறிமுகம் செய்துள்ளது லாவா நிறுவனம். ஆன்லைன் மற்றும் ஆப்லைன் சந்தையில் இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது. 

பின்பக்கத்தில் இரண்டு கேமிரா, மீடியாடெக் ஹீலியோ புரோசஸர், 2GB DDR4X மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், டைப் சி USB போர்ட், 6000 mAh பேட்டரி மற்றும் 7 இன்ச் HD திரையும் கொண்டுள்ளது இந்த போன். இதன் விலை 7799 ரூபாய் என தெரிவிக்கபட்டுள்ளது. 

“டிஜிட்டல் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த போனை வடிவமைத்துள்ளோம். இந்த பட்ஜெட் போனை பயன்படுத்தி அனைத்து மாணவர்களும் தடையின்றி கல்வி பயிலலாம் என்ற நம்பிக்கை உள்ளது. நிச்சயம் இந்த போன் ஆண்டராய்ட் பயனர்களுக்கு நல்லவிதமான பயன்பாட்டு அனுபவத்தினை கொடுக்கும் என நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார் லாவா இன்டர்நேஷ்னலின் தலைவர் தேஜிந்தர் சிங். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com