தாராள தள்ளுபடியில் அசத்தும் ஐஃபோன்

தாராள தள்ளுபடியில் அசத்தும் ஐஃபோன்

தாராள தள்ளுபடியில் அசத்தும் ஐஃபோன்
Published on

தந்தையர் தினத்தை முன்னிட்டு இன்று முதல் ஜுன் 10 ஆம் தேதி வரை இணையதள சந்தையான ஃபிளிப்கார்ட்டில் ஐஃபோன் 6 தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அமேசான், ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட இணையதள சந்தைகள் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக அவ்வப்போது பல்வேறு சலுகைகளை போட்டி போட்டுக்கொண்டு வழங்கி வருகின்றனர். இந்நிலையில் வரும் ஜுன் 18 ஆம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்பட உள்ளது. எனவே, தந்தையர் தினத்தை முன்னிட்டு, இணையதள சந்தையான ஃபிளிப்கார்ட், ஐஃபோன் 6 ஃபோனை தள்ளுபடி விலையில் விற்பனை செய்கிறது. இந்த தள்ளுபடியை பயனாளர்கள் ஜுன் 10 ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது, தற்போது 16 ஜிபி சில்வர் வேரியன்ட் மொபைல் 36,990 ரூபாயும், ஸ்பேஸ் கிரே வேரியன்ட் 24,990 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 32 ஜிபி கொண்ட ரோஸ் கோல்டு, கோல்டு, சில்வர், ஸ்பேஸ் கிரே உள்ளிட்ட ஐஃபோன்கள் 21,999 ரூபாய்க்கும், 16 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐஃபோன்கள் 20,999 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறது. மேலும், மொபைல் எக்ஸ்சேன்ஜ் செய்யும் போது 15,000 ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com