‘Battlegrounds Mobile India’ மொபைல் கேமின் புதிய டீஸர் வெளியானது

‘Battlegrounds Mobile India’ மொபைல் கேமின் புதிய டீஸர் வெளியானது
‘Battlegrounds Mobile India’ மொபைல் கேமின் புதிய டீஸர் வெளியானது
Published on

தென் கொரியாவை சேர்ந்த வீடியோ கேம் டெவலப்பரான ‘KRAFTON’, பப்ஜி மொபைல் கேமை போலவே தோற்றம் அளிக்கும் Battlegrounds Mobile India என்ற கேமை வடிவமைத்துள்ளது. இது இந்தியாவின் பப்ஜி மொபைல் கேம் வெர்ஷன் என சொல்லப்படுகிறது. இந்த கேமுக்கான முன்பதிவு நடந்து வரும் நிலையில் புதிய டீஸர் ஒன்றை வெளியிட்டுள்ளது KRAFTON. 

இந்த டீஸரில் ஸ்போர்ட்ஸ் யுட்டிலிட்டி வாகனமான மிலிட்டரி ஜீப் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. ‘ERANGEL மலையை உலா வர’ என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. பிளே ஸ்டோரில் பலரும் மும்முரமாக முன்பதிவு செய்து வருகின்றனர். 

இருப்பினும் இந்த கேம் எப்போது வெளியாகிறது என்ற விவரம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. வெகு விரைவில் என டீஸர் முடிகிறது. கூடிய விரைவில் இது வெளியாகி பப்ஜி பிரியர்களிடையை வரவேற்பை பெரும் என தெரிகிறது. 

இந்தியாவின் பாதுகாப்பு கருதி சீன நாட்டின் 117 மொபைல் போன் அப்ளிகேஷன்களை பயன்படுத்த கடந்த செப்டம்பரில் தடை விதித்தது அரசு. அதில் மல்டி பிளேயர் மொபைல் கேம் அப்ளிகேஷனான பப்ஜி விளையாட்டும் முடக்கப்பட்டது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com