
உலகில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் மெஜேஜிங் அப்ளிகேஷன் வாட்ஸ் அப். பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான செயலி. இந்நிலையில் கிம்போ என்ற சம்ஸ்கிருத வார்த்தையை எடுத்து, ஒரு மெசேஜிங் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியது பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி.
அறிமுகப்படுத்தியதுதான் தாமதம் எங்க இருந்து திருடுனீங்க பாபா என ஆரம்பித்து வெளிநாட்டை சேர்ந்த நிறுவனத்தின் போலோ ஷாட் என்ற அப்ளிகேஷனை கிம்போ என இந்தியாவில் விற்கிறீர்களா என ஆதாரத்தோடு கலாய்த்தார்கள் நெட்டிசன்கள். இந்தநிலையில் தான் வந்த வேகத்தில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து காணாமல் போயிருக்கிறது கிம்போ
ஏன் இந்த வேகத்தில் பிளே ஸ்டோர் கிம்போவை வெளி்யேற்றியது என பார்த்தால், ஏகப்பட்ட எதிர்மறை (நெகட்டிவ்) கருத்துக்கள், ரேட்டிங்கில் குறைத்து கொடுக்கபட்ட மதிப்பெண், அப்ளிகேஷன் திருடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது என்று ரிப்போர்ட் செய்தது என பல காரணங்கள் சொல்லப்படுகிறது.
பதஞ்சலி நிறுவனத்திடம் கேட்டால், மக்கள் மனநிலை எப்படி இருக்கிறது என பார்க்கவே வெளியிட்டோம், விரைவில் முழுமையாக அனைத்து பிளே ஸ்டோரிலும் கிடைக்கும் என்றனர்.