\
ஜியோ போன் இன்று முதல் விநியோகம்

ஜியோ போன் இன்று முதல் விநியோகம்

ஜியோ போன் இன்று முதல் விநியோகம்
Published on: 

ஆயிரத்து 500 ரூபாய் விலையுடைய ஜியோ போன் தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று முதல் விநியோகிக்கப்படுகிறது. 

ஜியோ ஃபோன் கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல்  jio.com இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்யப்பட்டது.

 இதையடுத்து செப்டம்பர் முதல் இது வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த தொலைபேசி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழகம் முழுவதும் விற்பனைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com