jio + Disney+ Hotstar
jio + Disney+ Hotstarfacebook

jio உடன் இணைந்த Disney+ Hotstar!

OTT தளங்களான JIO cinema மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டாரை ஒரே தளத்தில் இணைக்கும் என்று நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Published on

பிப்ரவரி 14 அன்று ஜியோஸ்டார் நிறுவனம் ஜியோஹாட்ஸ்டாரை அறிமுகப்படுத்துவதாக அறிவித்து இருக்கிறது. OTT தளங்களான ஜியோசினிமா மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டாரை ஒரே தளத்தில் இணைக்கும் என்று நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகளுக்கான ஒளிபரப்பு உரிமைகள் டிஸ்னி வசம் இருந்தவரை அதிக பார்வையாளர்களை கொண்டிருந்தது. ஐபிஎல் ஓடிடி உரிமம் ஜியோவிடம் கைமாறிய பிறகு டிஸ்னி சந்தாதாரர்கள் ஜியோவிடம் சென்றனர். இந்நிலையில் டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமா ஆகிய இரண்டையும் இணைந்து ஜியோஹாட்ஸ்டார் என்ற தளத்தை உருவாக்கியுள்ளது.

இருவேறு தளங்களிலும் இருந்த ஓடிடி கண்டென்ட்டுகள் இனி ஒரே தளத்தில் பார்க்கும்படி இருக்கும். தற்போது இதில் இருக்கும் நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், லைவ் போன்றவற்றை இலவசமாக பார்க்கலாம். அதில் விளம்பரங்கள் இடைஇடையே வரும். சந்தா கட்டிப்பார்ப்பவர்களுக்கு விளம்பர இடையூறு இல்லாமல் நிகழ்ச்சிகளை பார்க்க முடியும். Quality சிறந்ததாக அமையும். ஏற்கனவே பணம் கட்டி இருக்கும் சந்தாதாரர்களுக்கு சந்தா காலம் முடியும்வரை இது அப்படியே தொடரும். புதிதாக எதுவும் கட்ட தேவையில்லை. அதே நேரத்தில் புதிய சந்தாதாரர்களுக்கென 149 ரூபாய் முதல் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் சொல்லப்படுகிறது.

Competition Commission of India மற்றும் National Company Law Tribunal இரண்டும் கடந்த ஆண்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டிஸ்னி இணைப்புக்கு ஒப்புதல் அளித்தது. இரண்டின் இணைப்பின் மூலம் ரிலையன்ஸ் 60% பங்குகளை தன்வசம் வைத்துள்ளது. அதில் 16% நேரடியாகவும், 47% பங்குகளை viacom 18 business மூலமாகவும் வைத்திருக்கிறது. அதேபோல டிஸ்னி 37% பங்குகளை தன்வசம் வைத்துள்ளது.

jio + Disney+ Hotstar
மார்ச் மாதத்தின் மத்தியில் பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்!

Original content-ஐ தவிர ஜியோஹாட்ஸ்டார் NBCUniversal Peacock, Warner Bros, Discovery, HBO மற்றும் Paramount ஆகியவற்றின் contentகளை பார்வையாளர்களுக்கு தரும். கூடுதலாக, பிரீமியர் லீக், விம்பிள்டன், புரோ கபடி மற்றும் ஐஎஸ்எல் போன்ற முக்கிய விளையாட்டு நிகழ்வுகளுடன், IPL, WPL, and ICC நிகழ்வுகள் உள்ளிட்ட முதன்மையான கிரிக்கெட் போட்டிகளை ஜியோஹாட்ஸ்டார் தொடர்ந்து வழக்கம் போல host செய்யும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com