தடையான ஜியோ அழைப்புகள்! வருமா? வராதா?

தடையான ஜியோ அழைப்புகள்! வருமா? வராதா?

தடையான ஜியோ அழைப்புகள்! வருமா? வராதா?
Published on

ஏர்செல் பிரச்னை நிலவி வரும் நிலையில், பல்வேறு இடங்களில் ஜியோ அழைப்புகள் இயங்கவில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளது.

ஜியோ அழைப்புகள் பெரும்பாலும் வீட்டுக்கு உள்ளேயும், கட்டங்களின் அடித்தளங்களிலும் சரியாக இயங்குவதில்லை என்று வாடிக்கையாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது. அத்துடன் அடிக்கடி ஜியோ அழைப்புகள் இயங்காமல் இருக்கும், பின்னர் சிறிது நேரத்தில் தானாகவே இயங்கும் என்றும் ஜியோ வாடிக்கையாளர்கள் பலர் கூறுகின்றனர்.

இருப்பினும் இன்று மதியத்திற்கு மேல் தடையான ஜியோ அழைப்புகள் இதுவரை மீண்டும் இயங்கவில்லை என்பது அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஏர்செல் நெட்வோர்க் டவர் நிறுவனங்களுடனான பிரச்னையில் முடங்கியுள்ள நிலையில், தற்போது ஜியோ அழைப்புகளிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது வாடிக்கையாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com