ஆண்ட்ராய்டு கோ எடிஷனில் வெளியாகிறது 'ஜியோபோன் நெக்ஸ்ட்'

ஆண்ட்ராய்டு கோ எடிஷனில் வெளியாகிறது 'ஜியோபோன் நெக்ஸ்ட்'
ஆண்ட்ராய்டு கோ எடிஷனில் வெளியாகிறது 'ஜியோபோன் நெக்ஸ்ட்'

இந்திய மொபைல் போன் மற்றும் மொபைல் நெட்வொர்க் சந்தையில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை உருவாக்கி வைத்துள்ளது ரிலையன்சின் ஜியோ. மலிவு விலையில் போன், மலிவு விலையில் மொபைல் டேட்டா மற்றும் அன்லிமிடட் அழைப்புகள் என ஜியோ அசத்தி வருகிறது. இந்நிலையில் ‘ஜியோ போன் நெக்ஸ்ட்’ என்ற ஸ்மார்ட் போனை களம் இறக்க உள்ளது ஜியோ. 

2ஜி பியூச்சர்போன் பயனர்களை ஸ்மார்ட்போன்களுக்கு மடைமாற்றும் நோக்கில் இதை அறிமுகம் செய்கிறது ஜியோ. அதுவும் மலிவு விலையில். தற்போது 5000 ரூபாய்க்கு கீழாக ஒரு ஸ்மார்ட் போனை சந்தையில் அறிமுகம் செய்வது எந்த ஒரு நிறுவனத்திற்கும் லாபத்தை கொடுக்காது என சொல்லப்படுகிறது. ஆனால் அதை ஜியோ முடியும் என சொல்கிறது. 

வழக்கமாக ஆண்ட்ராய்டு, iOS ஆபரேட்டிங் சிஸ்டத்தில்தான் ஸ்மார்ட்போன்கள் இயங்கும். இந்த நிலையில் ஜியோ ஆண்ட்ராய்டு கோ எடிஷனை தனது போனுக்கு பயன்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜியோ போன் நெக்ஸ்ட் சிறப்பம்சங்கள்!

5.5 இன்ச் HD டிஸ்பிளே, Qualcomm QM215 SoC புராஸசர், 2 அல்லது 3 ஜிபி ரேம், 16 அல்லது 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ், பின்பக்கத்தில் 13 மெகாபிக்சல் கேமரா, முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமரா, 4ஜி வோல்ட், டியூயல் சிம், 2,500 mAh பேட்டரி மாதிரியானவை இதில் இடம் பெற்றிருக்கலாம் என சொல்லப்படுகிறது. உத்தேசமாக வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி அன்று இந்த போன் அறிமுகமாகும் என சொல்லப்படுகிறது. 

அதென்ன ஆண்ட்ராய்ட் கோ எடிஷன்?

மலிவு விலையிலான போன்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டது தான் ஆண்ட்ராய்டு கோ எடிஷன். ஆண்ட்ராய்ட் ஆப்பிரேட்டிங் சிஸ்டத்திற்கு மாற்று இது. இதன் மூலம் ஆண்ட்ராய்ட் இயங்கு தளம் கொண்ட போன்களில் செய்யக்கூடிய பணிகளில் கணிசமானதை செய்யலாம். இருந்தாலும் முழுமையான ஆண்ட்ராய்டு போனில் கிடைக்கப்பெறும் வசதிகளை இதில் பெற முடியாது. ஜியோ போன் நெக்ஸ்ட், ஆண்ட்ராய்ட் கோ எடிஷன் 11 வெர்ஷனில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com