ஜியோவின் புதிய பரிணாமம் : ஜியோ ஸ்மார்ட் கிளாஸ் 

ஜியோவின் புதிய பரிணாமம் : ஜியோ ஸ்மார்ட் கிளாஸ் 
ஜியோவின் புதிய பரிணாமம் : ஜியோ ஸ்மார்ட் கிளாஸ் 

இந்தியாவில் டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஜியோவின் பங்கு அளப்பரியது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் இந்திய டிஜிட்டல் பயன்பாட்டாளர்களை ஜியோ வருகைக்கு முன், பின் என பிரித்துப் பார்த்தாலே தெரிந்துவிடும். சாமானியர்கள் எல்லோரும் இன்று செல்போனில் குறைந்த செலவில் இணைய இணைப்பு மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளைப் பயன்படுத்தவும் ஜியோவின் வருகையே பிரதான காரணம். அது தான் ஜியோவின் வெற்றியும் கூட. 

இந்தச் சூழலில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் 43வது ஆண்டு பொதுக் கூட்ட நிகழ்வில் ‘ஜியோ கிளாஸ்’ என்ற ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகம் செய்து அசத்தியுள்ளது அந்நிறுவனம். 

இந்த ஸ்மார்ட் கண்ணாடியை பயன்படுத்தி 3டி தொழில்நுட்பத்தில் வீடியோ கால்களை மேற்கொள்ளலாம். ஒரே நேரத்தில் இரண்டு பேரோடு இந்த கண்ணாடியை பயன்படுத்தி வீடியோ கால் பேச முடியும். மேலும் கட்டிங் எட்ஜ் தொழில்நுட்பத்தின் உதவியோடு இயங்கும் இந்த கண்ணாடியில் ஹெச்.டி டிஸ்பிளேயில் காட்சிகளைப் பார்க்கலாம். வீடியோ கால் பேசிக் கொண்டிருக்கும் போதே பட விளக்கங்களை (பிரசன்டேஷன்) பயன்படுத்தி அனைத்து விவரங்களையும் விவரமாக எடுத்துச் சொல்வதற்கான வசதியும் இதில் உள்ளது. 

75 கிராம் எடையுள்ள இந்த கண்ணாடியைப் பயன்படுத்தி வெர்ச்சுவல் கிளாஸ் ரூம் மற்றும் வெர்ச்சுவல் டூருக்கு செல்லும்  வசதிகளும் உள்ளன. கேமிராவும் இந்த கண்ணாடியில் பொருத்தப்பட்டுள்ளது. 

இணைய இணைப்புள்ள செல்போனோடு இந்த கண்ணாடியை கேபிள் மூலம் இணைத்து இயக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது டெமோ செய்யப்பட்டுள்ள இந்த கண்ணாடியின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com