திண்டுக்கல் மாணவன் கண்டுபிடித்துள்ள 'ஜெட் லைவ் சாட் செயலி' கூகுள் ப்ளே ஸ்டோரில் சேர்ப்பு

திண்டுக்கல் மாணவன் கண்டுபிடித்துள்ள 'ஜெட் லைவ் சாட் செயலி' கூகுள் ப்ளே ஸ்டோரில் சேர்ப்பு
திண்டுக்கல் மாணவன் கண்டுபிடித்துள்ள 'ஜெட் லைவ் சாட் செயலி' கூகுள் ப்ளே ஸ்டோரில் சேர்ப்பு

திண்டுக்கல்லை சேர்ந்த மாணவன் கண்டுபிடித்த செயலி கூகுள் ப்ளே ஸ்டோரில் சேர்க்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் தாமரைப்பாடியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் பிரனேஷ் (13). திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஐந்தாம் வகுப்பு முதல் கம்ப்யூட்டர் கல்வியை கற்றுவரும் இவர், ஜெட் லைவ் சாட் (jet live chat) என்ற செயலியை உருவாக்கி கூகுளில் சேர்க்க விண்ணப்பித்தார். செயலியை பரிசீலித்த கூகுள் பல கட்ட ஆய்வுக்குப் பின் அங்கீகரித்து ப்ளே ஸ்டோரில் சேர்த்துள்ளது.


தற்போது எரியோட்டில் வசிக்கும் மாணவர் கூறுகையில் இந்த செயலியின் சிறப்பு என்னவென்றால் ஆடியோ வீடியோ போன் அழைப்புகளை மேற்கொள்ளலாம். அதிகளவு எம்பி கொண்ட பைல்களை அதாவது ஒருமுழு திரைப்படத்தை கூட இந்த செயலி மூலமாக அனுப்ப முடியும். முகநூலில் லைக் பதிவிடுவது போல இந்த செயலில் அனுப்பப்படும் தகவல்களின் மீது ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறியீடுகளைக் கொண்டு கருத்து பதிவிடும் வாய்ப்பும் உள்ளது. எனது செயலிக்கு 2048ஆம் ஆண்டுவரை கூகுள் ஒப்பந்தம் செய்து தந்துள்ளது.

இந்த செயலியை 2018ஆம் ஆண்டுக்கு பிந்தைய மாடல் வெர்சன்களில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். அதற்கு முந்தைய மாடல் போன்களில் அப்டேட் செய்துகொள்ள வேண்டும். திண்டுக்கல் பகுதியை சேர்ந்த மாணவன் கண்டுபிடித்துள்ள ஜெட் லைவ் சாட் செயலி பொதுமக்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com