சீனா - பூட்டான் இடையே தோன்றிய 50 மடங்கு சக்தி கொண்ட ஜெட் மின்னல்... சுவாரஸ்ய தகவல்!

சமீப காலமாகவே அதீத சக்திவாய்ந்த மின்னல் ஒன்று பூமியை தாக்கி வருகிறது. அதற்கு விஞ்ஞானிகள் ஜெட் மின்னல் என்று பெயரிட்டுள்ளனர்.
ஜெட் மின்னல்
ஜெட் மின்னல்நாசா

மழைக்காலம் என்றால் மழையுடன் கூடிய இடி, மின்னல் உருவாகும். இத்தகைய மின்னல்கள் கண்களை பறிக்கும் வகையில், வெள்ளை நிறத்தில் வானத்தை இரு பாகங்களாக பிரிப்பதைப்போன்று பிரகாசமாய் தோன்றும். இது சாதாரணமான ஒரு மின்னல்தான். சமீப காலமாகவே அதீத சக்திவாய்ந்த மின்னல் ஒன்று பூமியை தாக்கி வருகிறது. அதற்கு விஞ்ஞானிகள் ஜெட் மின்னல் என்று பெயரிட்டுள்ளனர்.

ஜெட் மின்னல்
ஜெட் மின்னல்

இந்த ஜெட் மின்னலை சில ஆண்டுகளுக்கு முன்பு முனிச் பகுதியில் இருந்து சிங்கப்பூருக்கு விமானம் சென்றுக்கொண்டிருக்கும் பொழுது விமான பயணி ஒருவர் படம்பிடித்திருக்கிறார். அதுவும் இந்தியாவின் பத்ரக்கிற்கு மேலே 3.2 வினாடிகள் தோன்றிய இந்த மின்னலை எதார்த்தமாக படம் எடுத்து இருப்பார் அவர்.

ஜெட் மின்னல்
நாசா-வின் சைக் விண்கலம் மூலம் பூமியை வந்தடைந்த மர்ம சிக்னல்...! காத்திருந்த ஆச்சர்யம்

அதே போல சமீபத்தில் சீனாவிற்கும் பூட்டானுக்கும் இடையில் உள்ள இமாலயமலைகளின் மீது இத்தகைய மின்னல் தோன்றியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அப்படி தோன்றிய படத்தை தற்பொழுது நாசா வெளியிட்டுள்ளது.

அந்தப் படத்தின்படி ஐந்து மின்னல்கள், மேகத்தின் உச்சியில் தோன்றி மலையை இணைக்கும்படி செங்குத்தாக விழுந்திருக்கும். இத்தகைய ஜெட் மின்னல்கள் சாதாரண மின்னல்களை விட 50 மடங்கு சக்தி கொண்டவை என்று சொல்லப்படுகிறது. இவை தோன்றும்பொழுது சிகப்பு, ஆரஞ்சு நிற ஃபளாஷ்களை வெளியிடுகின்றன.

ஜெட் மின்னல்கள்
ஜெட் மின்னல்கள்

இந்த ராட்சத ஜெட் மின்னல்களின் சரியான காரணத்தை ஆராய்ச்சியாளர்களால் கணிக்க முடியவில்லை. அதனால் தொடர்ந்து இதைப்பற்றிய ஆராய்சியில் ஈடுபட்டு வருகின்றன.

பூமியின் வளிமண்டலத்தின் வெவ்வேறு அடுக்குகளுக்கு இடையில் மின் ஆற்றலை சமநிலைப்படுத்துவதில் இந்த ஜெட் மின்னல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதையும் படிக்கலாம்: அதென்ன FrontRunning... Quant முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்..?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com