டெக்
வானில் பறந்து தரையில் பயணிக்கும் “பறக்கும் கார்” - அசத்திய ஜப்பான் நபர்
வானில் பறந்து தரையில் பயணிக்கும் “பறக்கும் கார்” - அசத்திய ஜப்பான் நபர்
ஜப்பானின் ஸ்கைட்ரைவ் திட்டத்தின்படி பறக்கும் காரில் ஒரு நபர் அமர்ந்தபடி வெற்றிகரமாக பறந்து தரையிறங்கும் சோதனை செய்யப்பட்டுள்ளது.
நேற்று செய்தியாளர்களுக்குக் காட்டப்பட்ட ஒரு வீடியோவில், உந்துசக்திகளுடன் கூடிய சிறிய பைக் போல தோற்றமளிக்கும் ஒரு வாகனம் தரையில் இருந்து பல அடி (1-2 மீட்டர்) தூரம் பறந்து, நான்கு நிமிடங்கள் வலையுடனான பகுதியில் சுற்றி வந்தது. ஸ்கைட்ரைவ் முயற்சிக்கு தலைமை தாங்கும் டொமொஹிரோ புகுசாவா, 2023 க்குள் “பறக்கும் கார்” ஒரு நிஜ வாழ்க்கை தயாரிப்பாக உருவாக்கப்படலாம் என்று நம்புகிறேன், ஆனால் அதைப் பாதுகாப்பாக உருவாக்குவது மிக முக்கியமானது என்றும் ஒப்புக் கொண்டார்.