ஜப்பான் ஏவ நினைத்த சிறிய விண்கலம் தற்காலிகமாக நிறுத்தம்! என்ன காரணம்?

ஜப்பானின் நிலவை நோக்கிய விண்கலம் இன்று தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவின் சந்திரயான் 3 திட்டம் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் அறிவியல் ஆய்வுகளை தொடங்கியுள்ள நிலையில், ஜப்பானின் நிலவை நோக்கிய விண்கலமான ஸ்லிம் இன்று காலை விண்ணில் ஏவப்பட இருந்தது. மிகச்சிறிய விண்கலம் மூலம் நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கி ஆய்வு செய்வதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம் என சொல்லப்பட்டது.

ஜப்பானின் ஸ்லிம் விண்கலம்
நிலவுக்கு மிகச்சிறிய எடைகொண்ட விண்கலத்தை அனுப்பும் ஜப்பான்.. சிறப்புகள் என்ன..?

இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக ஜப்பானின் நிலவை நோக்கிய விண்கலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நிலவுக்கு அனுப்பவதற்கான மாற்றுத் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com