நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய ஜப்பான்! குறிவைத்த இடத்தில் துல்லியமாக இறக்கி சாதனை படைத்ததா?

குறிவைத்த இடத்தில் மிகவும் துல்லியமாக விண்கலத்தை இறக்கிய முதல் நாடு என்ற இலக்கை அடையும் முனைப்புடன் ஐப்பானின் ஸ்லிம் விண்கலம் ஏவப்பட்டது.

நிலவில் ஒரு விண்கலத்தை தரையிறக்கியதன் மூலம் நிலவை அடைந்த நாடுகளின் பட்டியலில் ஐந்தாவது நாடாக ஜப்பான் இணைந்துள்ளது.

குறிவைத்த இடத்தில் மிகவும் துல்லியமாக விண்கலத்தை இறக்கிய முதல் நாடு என்ற இலக்கை அடையும் முனைப்புடன் ஐப்பானின் ஸ்லிம் விண்கலம் ஏவப்பட்டது.

எனினும் இந்த குறிக்கோள் எட்டப்பட்டதா என்பதை மிகச்சரியாக கணிக்க 30 நாட்கள் வரை ஆகும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எனினும் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள சூரிய ஒளி பேட்டரி மின்சாரத்தை தயாரிக்காதது திட்டத்திற்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

இதனால் விண்கலத்தின் மின்சக்தி சில மணி நேரங்களுக்கு மட்டுமே நீடிக்கும் என ஜப்பான் விண்வெளி அறிவியல் மையத்தின் தலைவர் ஹிட்டோஷி குனிநாக்கா கூறினார்.

விண்கலங்கள் பொதுவாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பகுதியின் 10 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் பொருத்தமான ஒரு இடத்தில் தரையிறங்குவது வழக்கம். ஆனால் ஜப்பான் தேர்ந்தெடுத்த பகுதியிலிருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் விண்கலத்தை தரையிறக்க முயற்சி மேற்கொண்டது.

ஸ்லிம் விண்கலத்தின் நோக்கம் புதிய தரையிறங்கும் முறையை சோதனை செய்வதுதான். இதற்கு முன் அமெரிக்கா, சோவியத் யூனியன், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் மட்டுமே நிலவில் விண்கலங்களை தரையிறக்கியுள்ளன.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com