“வரலாற்றில் பதிந்த அந்த நிமிடம்”- நிலவில் மனிதன் கால் பதித்து இன்றோடு 51 ஆண்டுகள்

“வரலாற்றில் பதிந்த அந்த நிமிடம்”- நிலவில் மனிதன் கால் பதித்து இன்றோடு 51 ஆண்டுகள்
“வரலாற்றில் பதிந்த அந்த நிமிடம்”- நிலவில் மனிதன் கால் பதித்து இன்றோடு 51 ஆண்டுகள்

‘நிலவில் நான் எடுத்து வைக்கும் இந்த ஒரு அடி, மனிதக் குலத்தின் மிகப்பெரிய பாய்ச்சல்’ என சொல்லி நிலவில் நீல் ஆம்ஸ்ட்ராங் கால் பதித்து 51 ஆண்டுகளாகின்றன.

அந்த நிகழ்வு எப்படி நடந்தது?

1950-களின் காலக்கட்டத்தில் அமெரிக்காவுக்கும், சோவியத் யூனியனான ரஷ்யாவுக்கும் ‘யார் உலகின் வல்லரசு?’ என்ற போட்டி நடந்து கொண்டிருந்தது. அது விண்வெளி ஆராய்ச்சி உட்பட பல துறைகளிலும் பிரதிபலித்தது. அதன் ஒரு பகுதியாக இரு நாடுகளுமே தங்களது விண்கலத்தை நிலவின் மேற்பரப்புக்கு சென்றடைய செய்யும் முயற்சியில் இறங்கின. 

1959-இல் ரஷ்யா அனுப்பிய ‘லூனா2’ விண்கலம் தான் முதன்முதலில் நிலவுக்கு சென்ற ஆளில்லா விண்கலமாக அமைந்தது. அதன்பிறகு அமெரிக்கா உட்பட பல நாடுகள் இன்றுவரை தாங்கள் வடிவமைத்த விண்கலத்தை நிலவுக்கு அனுப்பும் பணியினை தொடர்ந்து செய்து வருகின்றன. ஒருகட்டத்தில் அந்த முயற்சி நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியாக மாற்றம் கண்டது. 

ரஷ்யா அதில் தோல்வியடைய 1961இல் அப்போதைய அமெரிக்க பிரதமர் ஜான்.எப்.கென்னடி ‘நிலவுக்கு மனிதனை அனுப்பும் முதல் நாடாக அமெரிக்கா இருக்கும்’ என்றார். அவரது அறிவிப்புக்கு பிறகு ஆய்வுகளை மேற்கொண்டனர் நாசா விஞ்ஞானிகள்.

எட்டு ஆண்டு காலம் வரை நீடித்த அந்த ஆய்வு பணிக்கு பிறகு, 1969இல் ஜூலை 16 அன்று ‘அப்பல்லோ 11’ விண்கலத்தில் அமெரிக்கா நிலவுக்கு மனிதர்களை அனுப்பியது. அதில் நீல் ஆம்ஸ்ட்ராங், மைக்கேல் காலின்ஸ் மற்றும் எட்வின் ஆல்ட்ரின் ஆகிய வீரர்கள் நிலவுக்கு புறப்பட்டனர். 

சில நாட்கள் பயணத்திற்கு பிறகு நிலவின் அருகே ‘அப்பல்லோ 11’ விண்கலம் சென்றடைந்தது. காலின்ஸ் விண்கலத்திலேயே தங்கிவிட ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஆல்ட்ரின் மட்டும் ‘ஈகிள்’ என்ற சிறிய ரக விண்வெளி ஓடத்தில் பயணித்து நிலவின் மேற்பரப்பை சென்றடைந்தனர். 

அங்கு அதை தரையிறக்க திட்டமிடப்பட்டிருந்த இடத்தில் பாறைகள் அதிகம் காணப்பட்டதால் அங்கிருந்து சில அடி தூரத்தில் ஜூலை 20 அன்று அதை லேண்ட் செய்தார் ஆம்ஸ்ட்ராங். சுமார் ஆறு மணி நேர காத்திருப்புக்கு பின்னர் ஜூலை 21 அதிகாலை ஆம்ஸ்ட்ராங் முதல் நபராக நிலவில் கால் பதித்தார். அந்த காட்சிகள் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது.  

‘நிலவில் நான் எடுத்து வைக்கும் இந்த ஒரு அடி, மனித குலத்தின் மிகப்பெரிய பாய்ச்சல்’ என சொல்லி நிலவில் கால் பதித்தார் ஆம்ஸ்ட்ராங். கூடவே அமெரிக்க கொடியை நட்டு விட்டு ‘அமைதியை விரும்பும் மக்கள் நாங்கள்’ என்கிற வரிகளையும் வைத்து விட்டு பத்திரமாக தனது குழுவினரோடு நாடு திரும்பினார். அதனை அமெரிக்கா மட்டுமல்லாது உலகமே ஆச்சரியத்தோடு வியந்து பார்த்தது. 

அதன் பிறகு அமெரிக்கா உட்பட பல நாடுகள் விண்வெளியில் சாதனைகளை புரிந்து வந்தாலும் கடந்த நூற்றாண்டில் மனிதன் மேற்கொண்ட முயற்சிகளில் ஆகச்சிறந்த முயற்சி அது என சொல்லப்படுகிறது. இன்றும் உலகம் முழுவதும் நிலவில் முதன்முதலில் கால் பதித்த நபராக எல்லோராலும் அமெரிக்கரான நீல் ஆம்ஸ்ட்ராங் அறியப்படுகிறார். நிலவில் ஆம்ஸ்ட்ராங் கால் வைத்து இன்றோடு 51 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

மூன் லேண்டிங் சர்ச்சை?

உலக நாடுகளை சேர்ந்த ஆராய்சசியாளர்கள் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கு செல்லவே இல்லை என நாசா பகிர்ந்த புகைப்படங்களை ஆராய்ச்சி செய்து தெரிவித்துள்ளனர். மேலும் அமெரிக்கா சொன்ன பொய்களில் இதுவும் ஒன்று  என தொடர்ந்து சொல்லப்படுகிறது. அது தொடர்பாக சுமார் ஆறு குற்றச்சாட்டுகளையும் அவர்கள் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. அதில் நான்கு குற்றச்சாட்டுகள் தொடர்பாக மட்டுமே நாசா மையம் விளக்கம் கொடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com